Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், மயூவை பார்க்க விடாமல் கோபியை தடுக்கணும் என்பதற்காக கோவில் டிராமாவை போட்டு ஈஸ்வரி கோபியை கூட்டிட்டு கிளம்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட ராதிகாவின் அம்மா, வீட்டிற்கு சென்று ராதிகாவிடம் சொல்கிறார். பக்கத்தில் இருக்கும் இந்த வீட்டிற்கு கோபியால் வர முடியவில்லை. ஆனால் அவங்க அம்மா கூப்பிட்டதும் ஊருக்கு கிளம்பிட்டார் என்று சொல்கிறார்.
உடனே ராதிகா அதிரடியாக முடிவை எடுக்கும் விதமாக லக்கேஜை எடுத்துட்டு போவதற்கு வண்டியை வர சொல்லிவிட்டார். இது தெரியாத கோபி குடும்பத்துடன் காரில் சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறார். ஆனாலும் கோபிக்கு மனசில் ஓரமாக ராதிகாவிடம் சொல்லாமல் வந்து விட்டோம் என்ற ஒரு நினைப்பு இருக்கிறது. அதனால் காரில் போகும் பொழுது யாருக்கும் தெரியாமல் நான் ஊருக்குப் போயிட்டு இருக்கிறேன் வந்து போன் பண்ணுகிறேன் என்று ஒரு வீடியோவை அனுப்பி வைத்து விட்டார்.
அந்த வீடியோவை பார்த்ததும் ராதிகா இன்னும் அதிகமாக தான் கோபப்பட்டார். இதனை தொடர்ந்து பாக்யா, வீட்டு ஹாலில் உட்கார்ந்து கணக்கு பார்த்துட்டு இருக்கிறார். அப்பொழுது செல்வி ரொம்ப நாளாச்சு நீ இப்படி வந்து உட்கார்ந்தது என்று சொல்கிறார். உடனே பாக்கியா, அம்மா பையன் இரண்டு பேரும் செண்டிமெண்ட் போட்டு பாசத்தை காட்டும் பொழுது என்னால் இங்கே வர முடியவில்லை.
அடுப்பங்கரை மற்றும் ரூம் என மாத்தி மாத்தி அங்கே அடஞ்சுகிட்டேன் என்று பாக்கியா ரொம்பவே நொந்து பேசுகிறார். இன்னும் ரெஸ்டாரன்ட் நல்ல பெரிய நிலைமைக்கு வந்ததும் ரெஸ்டாரண்ட் பக்கத்திலேயே ஒரு வீடை பார்த்து அங்கே போயிடனும் என்று சொல்கிறார். இதற்கு செல்வி, நீ மட்டும் தனியா இருக்க முடியாது. உன் கூடவே இனியா வர வேண்டும்.
இனியா தனியா வர மாட்டாள், டாடி வேணும் என்று கோபியை கூட்டிட்டு தான் வருவாள். பிறகு நீ எப்படி அங்கே சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்கிறார். உடனே பாக்யா, சும்மா கூட ஒரு கற்பனையில நான் சந்தோசமா இருந்திடக்கூடாதா அதுலயும் ஏதாவது சொல்லி குழப்பத்தை பண்ணுவியா என்று செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர் ராதிகா வீடு காலி பண்ணுகிற விஷயத்தை வந்து சொல்லுகிறார்.
உடனே ராதிகாவிற்கு பாக்கியா போன் பண்ணி நான் உங்களிடம் பேச வேண்டும் வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, வீட்டுக்கு வர வேண்டாம் பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாங்க பேசலாம் என்று சொல்லுகிறார். உடனே இரண்டு பேரும் பேசிய நிலையில் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் ரொம்பவே வெறுப்பாகிவிட்டது. போதும் கோபியை நம்பி நான் இந்த அளவிற்கு நிம்மதியை தொலைத்தது.
இனி எனக்கான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை விட மயூக்காக நான் வாழ வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன். இதனால் நான் எங்கே போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. இதற்கடுத்து கூட நம் இரண்டு பேரும் சந்திப்போமா என்று கூட தெரியாது. ஆனால் இதற்குப் பிறகு நிம்மதியாக இருப்பேன் மட்டும் எனக்கு தெரியும் என்று ராதிகா பாக்கியவிடம் பேசிவிட்டு போய்விடுகிறார்.
இதனை தொடர்ந்து கோபி, ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா என அனைவரும் சேர்ந்து கோவிலில் பூஜை எல்லாம் முடித்த பிறகு இந்த சந்தோஷம் எனக்கு நீடித்து இருக்க வேண்டும். என்னை விட்டு எங்கேயும் போகக்கூடாது என் கூடவே இருப்பேன் என்று எனக்கு சத்தியம் பண்ணு என கோபியிடம் ஈஸ்வரி கேட்கிறார். கோபியும் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஈஸ்வரி கேட்ட சத்தியத்தை கொடுத்து விடுகிறார்.