வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆசை முதல் புறநானூறு வரை சூர்யா மிஸ் பண்ணிய 8 படங்கள்.. மொத்தமா கோட்டை விட்டுட்டாரே!

Suriya: நடிகர் சூர்யா புறநானூறு படத்தை மிஸ் பண்ணியது அவருடைய ரசிகர்களுக்கே மிகப்பெரிய வருத்தமான விஷயம் தான்.

இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் கதை களம் தான். தற்போது அந்த பட வாய்ப்பு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.

மொத்தமா கோட்டை விட்டுட்டாரே!

இதுபோன்று சூர்யா தன்னுடைய சினிமா கேரியரில் 8 படங்களை மிஸ் பண்ணி இருக்கிறார். இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் மற்றும் சுவலட்சுமி நடித்த படம் தான் ஆசை.

இந்த படம் அஜித்தின் கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் நடிப்பதற்கு வசந்த் முதன் முதலில் சூர்யாவை தான் அணுகி இருக்கிறார்.

சூர்யாவுக்கு அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லாததால் இந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அதேபோன்று இன்று வரை 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடப்படும் படமாக இருப்பது இயற்கை.

இந்த படத்தின் கதையும் முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது ரொமான்ஸ் படங்களில் நடிக்க வேண்டாம் என்று சூர்யா முடிவெடுத்திருந்ததால் நோ சொல்லியிருக்கிறார்.

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணைந்த படம் தான் துருவ நட்சத்திரம்.

படத்தில் கமிட் ஆகி ஒரு வருடம் மேலாகியும் கதையே தன்னிடம் முழுதாக சொல்லாததால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

சூது கவ்வும் படத்திற்குப் பிறகு இயக்குனர் நலன் குமாரசாமி சூர்யாவுடன் இணைந்து முழுக்க முழுக்க காதல் திரைப்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

இந்த படத்திற்கு எஸ்கிமோ காதல் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் பட வேலைகள் சூர்யாவுக்கு அதிகமாக இருந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

மெட்ராஸ் படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றுவதாக இருந்தது.

ஆனால் இயக்குனர் ரஞ்சித்திற்கு அடுத்தடுத்து கபாலி, காலா என ரஜினிகாந்த் படங்கள் கிடைத்ததால் இவர்கள் இருவரும் இணையவில்லை.

ஆறு மற்றும் சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யா மற்றும் ஹரி அருவா என்னும் படத்தில் இணைவதாக இருந்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் டிராப்பானது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டவர் என்று இயக்குனர் பாலாவை சொல்லலாம். இவர்களது கூட்டணியில் முதலில் உருவாக இருந்த படம் தான் வணங்கான்.

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இதில் அருண் விஜய் இணைந்தார்.

இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றால், சூர்யாவுக்கு இது பெரிய மிஸ்ஸிங் படமாக அமைந்துவிடும்.

இப்போதைக்கு சூர்யா ரசிகர்களின் பெரிய ஏமாற்றமாக அமைந்தது புறநானூறு படம் தான்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மீண்டும் சூர்யாவை உச்சத்திற்கு கொண்டு சென்று விடும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

தற்போது அந்த பெரிய வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.

Trending News