புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

கோபியை பாக்யா தலையில் கெட்ட ஈஸ்வரி போட்ட முடிச்சு.. ராதிகா அம்மா செய்யும் சூழ்ச்சியால் ஏற்படும் மாற்றம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி கூப்பிட்டதும் என்ன ஏது என்று கூட யோசிக்க முடியாத அளவிற்கு சின்ன பிள்ளைத்தனமாக கோபி, அம்மா பின்னாடியே கோவிலுக்கு போய்விட்டார். போன இடத்தில் செண்டிமெண்டாக பேசி பாசத்தைக் காட்டி இனி என்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன், எங்க கூட நம்ம வீட்டிலேயே இருப்பேன் என்று சத்தியம் பண்ணு என்று ஈஸ்வரி கேட்டுவிட்டார்.

கோபியும், ராதிகா மற்றும் மயூவை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அம்மா கேட்ட சத்தியத்தை உடனே பண்ணி விடுகிறார். இதனை பார்த்த இனியா மற்றும் செழியன் ரொம்பவே சந்தோஷப்பட்டு கொண்டார்கள். ஆனால் இதெல்லாம் தெரியதற்கு முன் கோபி இனி எதற்கும் சரிப்பட்டு வர மாட்டார் என்ற முடிவில் ராதிகா வீட்டை காலி பண்ணுவதற்கு எல்லாம் தயாராகி விட்டார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாக்யா, ராதிகாவை சந்தித்து தடுத்து பார்த்தார். ஆனால் ராதிகா எனக்கு தன்மானம் இருக்கிறது என் வீட்டுக்காரர் எப்பொழுது வருவார் எப்படி நடந்து கொள்வார் என்று ஒவ்வொரு நிமிஷமும் என்னால் யோசித்துக் கொண்டே இருக்க முடியாது.

இனி எனக்காக வாழ்க்கை என்பதை விட என்னுடைய மகளுக்கான வாழ்க்கை என்று முடிவு பண்ணி அவளுடைய சந்தோஷத்தை மட்டும் மனதில் வைத்து நான் சில முடிவுகளை எடுத்து இருக்கிறேன். அதனால் இனி யார் என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லை நான் இந்த வீட்டை விட்டு காலி பண்ணி எங்கேயாவது ஒரு இடத்தில் என் மகளுடன் சந்தோஷமாக இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

அடுத்ததாக ஈஸ்வரி வாங்கிய சத்தியத்தால் கோபி வெளியே மட்டுமில்லாமல் ராதிகா கூடவும் சேர முடியாது என்பதால் இனி பாக்யாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி அடுத்து பல சூட்சுமங்களை செய்து பாக்கியா தலையில் கட்டி வைத்து விடுவார்.

இந்த பாக்யாவும் மகள் பையன் மாமியார் என்று ஒரு பாச ட்ராமாவில் அடிமையாகியதால் கோபியை வெளியே துரத்தி விடாமல் வீட்டுக்குள்ளே வைத்து அழகு பார்க்கிறார். அந்த வகையில் ஈஸ்வரி சொன்னதும் பாக்யா கோபியுடன் சேர்ந்து வாழ்வதற்கு தலையை ஆட்டி விடுவார் போல.

ஆனாலும் இப்படிப்பட்டவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது என்ற உச்சகட்ட கோபத்தில் ராதிகாவின் அம்மா கொந்தளித்துப் போய் இருக்கிறார். அந்த வகையில் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ஈஸ்வரியை நிம்மதி இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பக்கம் போலீஸ் ஸ்டேஷன் மூலம் புகார் கொடுக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார்.

அந்த வகையில் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப ராதிகாவின் அம்மா ஏதாவது சூட்சமம் செய்யப் போகும் பொழுது நிச்சயம் அது ராதிகாவிற்கு ஏற்ற மாதிரியான ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இன்னும் ஒரு சில நாட்களில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு சுபம் போட்டு பெரிய பூசணிக்காவை உடைக்க இயக்குனர் தயாராகிவிட்டார்.

Trending News