புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

மனோஜை தன் பக்கம் இழுக்க காய் நகர்த்தும் ரோகினி.. அடுத்து முத்து கண்ணில் சிக்க போகும் கசாப்பு கடை மணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஜீவா கொடுத்த பணத்தை மொத்தமாக மனோஜ் மற்றும் ரோகினி ஏமாற்றி ஷோரூம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற விஷயம் முத்து மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. உடனே விஜயா, மனோஜிடம் எதற்காக இவ்வளவு பெரிய விஷயத்தை என்னிடம் மறைத்தாய் என்று கேட்கிறார்.

மனோஜ் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் எல்லாத்துக்கும் காரணம் ரோகிணி தான். ரோகிணி தான் பணத்தை வாங்கிய விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். அதன் மூலம் நாம் ஷோரூம் ஆரம்பித்து பிசினஸ் பண்ணலாம் என்று ஐடியா கொடுத்ததாக மனோஜ் சொல்லிவிட்டார். இதை கேட்டதும் விஜயாவிற்கு மொத்த கோபமும் ரோகிணி மீது திரும்பியது.

அந்த வகையில் ரோகிணி இடம் என் வீட்டுக்காரர் பணத்தையே ஆட்டைய போட்டுட்டு எங்களிடம் சொல்லாமல் கமுக்கமாக வேலை பார்த்திருக்கிறாயா என்று சொல்லி கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். உடனே ரோகிணி தன் மீது நியாயம் இருக்கும்படி பேசும் அளவிற்கு மனோஜ் வேலையில்லாமல் சுத்திக் கொண்டிருந்தார். அப்படியே இருந்தால் அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதற்காக அந்த பணத்தை வைத்து பிசினஸ் பண்ணலாம் என ஐடியா கொடுத்ததாக சொல்லிவிட்டார்.

உடனே விஜயா, பணம் கிடைத்த விஷயத்தை எங்களிடமே சொல்லி கேட்டிருந்தால் நாங்களே பணம் கொடுத்து உதவி பண்ணி இருப்போமே என்று சொல்கிறார். அதற்கு ரோகினி நீங்க அப்படி இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க உங்க பையனுக்கு என்று கேள்வி கேட்டதும் விஜயாவிற்கும் இன்னும் அதிகமாக கோபம் வந்துவிட்டது. இதுவரை நான் என் பையனுக்கு எதுவும் பண்ணாமலேயே படிக்க வைத்திருக்கிறேன் என்று சொல்லி மறுபடியும் கணத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

நீங்க படிக்க வச்சீங்க தவிர அவருக்கு மண்டையில் எதுவும் மூளை வேலை செய்யாது. சுயமாக சிந்தித்து செயல்படவும் தெரியாது ஒரு உதவாக்கரை என்று சொல்லாமல் ரோகிணி, மனோஜ் மீது குற்றம் சாட்டி விட்டார். இதை கேட்டதும் விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகி விட்டது. அதாவது என் பையன் மூளை இல்லாதவன் அறிவாளி இல்லை என்று சொல்லாமல் சொல்கிறாயா என மறுபடியும் அடிப்பதற்கு கை ஓங்கினார்.

ஆனால் அண்ணாமலை வந்து தடுத்துவிட்டு ரோகிணியை ரூமுக்குள் போக சொல்லிவிட்டார். ஆனால் இவ்வளவு தூரம் நடந்த பிறகு கூட மனோஜ் ரோகினிக்கு சப்போர்ட்டாக எந்த ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்பதால் ரோகிணி அதற்கும் சேர்த்து ரொம்பவே பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு ரோகிணியை சமாதானப்படுத்த போன மனோஜை விஜயா தடுத்து விட்டார்.

இந்த விஷயத்தை எல்லாம் வைத்து முத்து மற்றும் ரோகினி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ரவி சுருதி வந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். மனோஜ் தான் இப்படி என்றால் ரோகிணியும் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்திருக்கிறார்களே, ஆனால் அத்தை ரோகிணியை மட்டும் அடிப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். மனோஜை கொஞ்சம் கூட கேள்வி கேட்கவில்லை என்று சுருதி சொல்கிறார்.

இப்படி இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அடுப்பாங்கறையில் ரோகிணி மற்றும் மனோஜை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மனோஜ் எதற்கும் லாயக்கில்லை ஒரு உதவாக்கரை என்பதை சொல்லாமல் ரோகினி உதவி பண்ணியதாக சொல்லி இருக்கிறார். அதே மாதிரி தன் மாட்டிக் கொண்டோம் என்பதற்காக ரோகிணி மீது பழியையும் மனோஜ் போட்டுவிட்டார். இவங்க என்ன ஒரு கணவன் மனைவி என்றே தெரியவில்லை என பேசிக்கொள்கிறார்கள்.

இதை கேட்டதும் மனோஜ், ரோகினி இடம் சண்டை போடுகிறார். நீ எதற்காக என்னை பற்றி வெளியே அப்படி ஒரு வார்த்தையை சொன்னாய். நான் எதற்கும் உதவ மாட்டேனா, எனக்கு மூளை இல்லையா என்று கேட்கிறார். அதற்கு நீ எல்லாம் எனக்கு ஒரு கணவரா உங்க அம்மா என்னை அடிக்கும் போது நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.

உனக்காக தானே நான் இவ்வளவும் பண்ணினேன் எனக்கு ஒரு சப்போர்ட்டாக பேசவே இல்லை என்று ரோகிணி கோபப்படுகிறார். இதனை தொடர்ந்து சண்டை போட்டுவிட்டு ரோகிணி வெளியே கிளம்பி விடுகிறார். எப்படியாவது மனோஜ் தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று ரோகிணி காய் நகர்த்துப் போகிறார். ஏனென்றால் இந்த ஒரு விஷயத்திலேயே தெரிந்து விட்டது மனோஜ் நம் பக்கம் வரவில்லை என்று.

இன்னும் அடுத்தடுத்து எல்லா விஷயமும் தெரிந்து விட்டால் மனோஜ் நிச்சயம் நம்மளை ஒதுக்கி விடுவார் என்ற பயம் ரோகினிக்கு வந்துவிட்டது. இதனை தொடர்ந்து ரோகிணியின் மாமா என்று பொய் சொல்லிக் கொண்டு திரியும் கசாப்பு கடை மணி முத்து கண்ணில் சிக்க போகிறார். அடுத்து இந்த உண்மையும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய போகிறது. இனி ரோகினிக்கு இடிமேல் இடி வந்து விழப் போகிறது.

Trending News