Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 75 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து செண்டிமெண்டாக பேசி பாசத்தை கொட்டி விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து இதுவரை பிக் பாஸ் சீசனில் இல்லாத ஒரு விஷயமாக இன்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். சௌந்தர்யாவின் நண்பராக விஷ்ணு உள்ளே போகிறார். அவரைப் பார்த்து சந்தோஷத்தில் சௌந்தர்யா காதலை சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.
அடுத்ததாக அருணுக்கு அர்ச்சனா சென்று நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புரிய வைத்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் நெருங்கிய தோழி மற்றும் சீரியல் நடிகையுமான சியாமந்தாவும் உள்ளே போய் இருக்கிறார். இவரைப் பார்த்து சந்தோஷத்தில் பவி எமோஷனலாக அழ ஆரம்பித்து விட்டார்.
மேலும் விஷாலை பார்த்து பேசுவதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகளாகவும் எழிலின் தங்கையாகவும் நடித்த இனியா என்கிற நேகா உள்ளே போயிருக்கிறார். அப்படி போன பொழுது இருவரும் தனியாக பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது இனியா கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் விஜய் சேதுபதி சார் ஒரு நாள் உன்னிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்.
ஆனால் அது என்ன விஷயம் என்று உனக்கு தெரியுமா என்று கேட்ட நிலையில் விஷால், சௌந்தர்யாவை பற்றி தவறாக சொன்னதுதானே என்று கேட்கிறார். ஆமாம் ஆனால் இவ்வளவு தெரிஞ்சும் நீ அன்னைக்கு இந்த விஷயத்துக்காக சாரி சொல்லாமல் வேறு விஷயம் என்று பூசி மழுப்பி உள்ளிருக்கும் போட்டியாளர்களையும் திசை திருப்பி விட்டாய். ஏன் இப்படி பொய் சொல்லி எல்லாரையும் ஏமாற்றினாய் நீ செஞ்சது மிகப்பெரிய தப்பு.
அதனால் நீ சௌந்தர்யாவை பார்த்து தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். ஆனாலும் விஷால் அப்பொழுது கூட பண்ணியது தவறு என்று நினைக்காமல் பூசி மழுப்புகிறார். இதனைத் தொடர்ந்து மஞ்சரி மற்றும் முத்துக்குமாருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஈரோடு மகேஷ் உள்ளே போகிறார். அடுத்ததாக மற்ற போட்டியாளர்களின் நண்பர்களும் உள்ளே செல்லப் போகிறார்கள்.