சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஹீரோவை பார்க்க அசத்தல் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா.. எகிற போகும் விஜய் டிவியின் டிஆர்பி

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டாலே விஜய் டிவியின் டிஆர்பி உயர்ந்துவிடும். ஆனால் இன்று அது இரு மடங்காக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் எதிர்பார்த்த அர்ச்சனா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

இவர் அருணின் காதலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை.

இருந்தாலும் அர்ச்சனா சோசியல் மீடியாவில் அருணுக்கு வக்காலத்து வாங்கி அதை உறுதிப்படுத்தினார். அதை தொடர்ந்து இன்று தன்னுடைய ஹீரோவை காண அவர் வீட்டுக்குள் வந்துள்ளார்.

எகிற போகும் விஜய் டிவியின் டிஆர்பி

அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அருண் தன்னுடைய ஹார்லி குயின் இவர் தான் என அறிமுகப்படுத்தினார். அதை அடுத்து இந்த காதல் ஜோடி மெய் மறந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் அருண் டிக்கெட் to பினாலே ஜெயிப்பேன் என காதலிக்கு வாக்கு கொடுக்கிறார். அதே போல் அர்ச்சனா யாரு என்ன சொன்னாலும் நீ நீயாவே இரு.

நீ தான் என்னுடைய ஹீரோ என சொல்கிறார். இப்படியாக ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல் முத்துவை காண ஈரோடு மகேஷ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

இப்படி பிரபலங்களின் வருகையால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியுள்ளது. அதனால் இன்றைய எபிசோட் டிஆர்பி கலை கட்டப் போகிறது.

Trending News