புஷ்பா 2 படத்தின் வசூல் 2000 கோடியை நெருங்கிவிட்டது. Table Profit எல்லாம் சேர்த்து கூட்டி கழித்து பார்த்தால், நிச்சயம் 3000 கோடியை தொட்டுவிடும். இப்படி அடுத்த லெவெலுக்கு சென்று கொண்டிருக்கும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில், மாபெரும் படைப்பாக அடுத்து உருவாகப்போகிறது ராஜமௌலியின் படம்.
இந்த படத்துக்கான ப்ரீ ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக மஹாபாரத கதையாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெரிய பெரிய நடிகர்கள் நடிப்பதாலையே படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடியில் உருவாகப்போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடி படுகிறது.
இந்த நிலையில், இந்த மஹாபாரத கதையில் நடிப்பவர்களுக்கு என்று இந்தியா முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி, கர்ணனாக பிரபாஸ் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
கிருஷ்ணராக மகேஷ் பாபு, அர்ஜுனராக ராம் சரண், தர்மராக அஜய் தேவ்கன், பீமராக ஜூனியர் NTR, நகுலனாக ஷாஹித் கபூர், சகாதேவனாக நாணி, துரியோதனனாக ராணா டகுபதி, துச்சாதனனாக விஜய் சேதுபதி, திரௌபதியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இதை கேட்ட ரசிகர்கள், பட்ஜெட் 1000 கோடி பத்தவே பத்தாது என்று கூறி வந்தாலும், இவர்கள் எல்லோரும் நடித்தால் நிச்சயம் பிரமாண்டமாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.
இதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், மஹாபாரத கதையை தான் இவ்வளவு பட்ஜெட் போட்டு எடுக்க வாய்ப்புள்ளது, வேறு எந்த படத்துக்கும் எந்த தயாரிப்பாளரும் இந்த பட்ஜெட்டை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.