Sandhiya ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தனத்தை வைத்து எப்படியாவது ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று புவனேஸ்வரி ப்ளான் பண்ணி வைத்திருக்கிறார். அதன்படி கார்த்திக், தனத்தை அடிக்கடி சந்தித்து பிளாக்மெயில் பண்ணும் விதமாக நீ வரவில்லை என்றால் நான் உயிரை விட்டு விடுவேன் என்று சொல்லி தொந்தரவு கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தினமும் யாருக்கும் தெரியாமல் தனத்தின் ரூமுக்கு வந்து கார்த்திக் மிரட்டி விட்டு போகிறார். தனம் நீ வரவில்லை என்றால் நான் உயிரை விட்டு விடுவேன் என்று சொல்லியதால் தனம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக நான் உனக்கு ஒரு சான்ஸ் தருகிறேன் நாளைக்கு நீ கோவிலுக்கு வரவேண்டும் என்று கார்த்திக், தனத்திற்கு கெடு வைத்திருக்கிறார்.
ஆனால் தனம், அம்மாவின் பேச்சையும் மீற முடியாது குடும்பத்தையும் உதறிவிட்டு கார்த்திக் கூட போக முடியாது. அதே நேரத்தில் இந்த கார்த்திக்கும் தொடர்ந்து தொந்தரவு பண்ணி வருவதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தற்போது விபரீத முடிவு எடுக்கும் அளவிற்கு துணிந்து விட்டார். அந்த வகையில் ஜானகிக்கு லட்டர் எழுதும் விதமாக என்னை மன்னித்து விடுங்கள்.
எனக்கு உயிர் வாழ ஆசை இல்லை, இந்த வாழ்க்கையும் தேவையில்லை, நான் என்னுடைய உயிரை விட்டு விடுகிறேன் என்று கடிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். இதை பார்த்த ஜானகி அதிர்ச்சியாகி என்ன பண்ணுவது என்று தெரியாமல் பயத்தில் இருக்கிறார். லெட்டர் எழுதி வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் தனம் விஷம் குடிப்பதற்கு தயாராகி விட்டார்.
ஆனால் தனம் விஷத்தை குடிக்கும் பொழுது நிச்சயமாக கதிர் வந்து தடுத்து விடுவார். அத்துடன் தனத்தை சமாதானப்படுத்தும் விதமாக உனக்கு நான் விவாகரத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் அதற்கு பதிலாக நீ உன்னுடைய லட்சியத்தின் குறிக்கோளாக இருந்து வெற்றி பெற வேண்டும் என்று தானே கேட்டேன். அதற்குள் ஏன் இப்படி ஒரு விபரீதம் முடிவை எடுக்கிறாய் என்று அட்வைஸ் பண்ணி கதிர் மற்றும் மாயா இருவரும் சேர்ந்து தடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.
அத்துடன் கூடிய விரைவில் கார்த்திக் பற்றிய சுயரூபமும், புவனேஸ்வரியின் வக்கிர புத்தியும் தனத்திற்கு தெரிய வந்துவிட்டால் இன்னும் நாடகம் சுவாரசியமாக இருக்கும்.