சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பிக் பாஸ்க்கு பிறகு புத்தம் புதிதாக வரப்போகும் 4 சீரியல்கள்.. இரண்டு சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகும் இயக்குனர்கள்

Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட ரியாலிட்டி ஷோ மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப காலமாக ரியாலிட்டி ஷோ மீது பெரிதும் ஆர்வம் இல்லாததால் சீரியலை பரவாயில்லை என்று மக்கள் சீரியலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் எக்கச்சக்கமான சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனால் வருசத்துக்கு 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு பதிலாக சில சீரியல்களை அவசரமாக முடித்து விடுவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆரம்பித்து 75 நாட்களை தாண்டி இருக்கிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு அடுத்து புத்தம் புது சீரியல்களை இறக்கலாம் என்று நான்கு சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்றால் சிந்து பைரவி, அய்யனார் துணை, பூங்காற்று திரும்புமா மற்றும் தனம் போன்ற நான்கு புது சீரியல்கள் வரப்போகிறது. \

அது மட்டுமில்லாமல் இரண்டு சீரியல்கள் முடிவடைய போகிறது. அந்த வகையில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல், பாக்கியலட்சுமி சீரியலையும் முடித்து விடலாம் என்று இயக்குனர்கள் கதைகளை வேகமாக கொண்டு வருகிறார்கள். இதில் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் நல்ல புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று இருந்தாலும் தற்போது கதையே இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருப்பதால் முடிக்கப் போகிறார்கள்.

மேலும் புத்தம் புதிதாக ஆரம்பித்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறாததால் அதையும் முடிக்கப் போகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த சீரியல்கள் மூலம் விஜய் டிவி, சன் டிவி கிட்ட நெருங்க முடியுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Trending News