புஷ்பா 2 துக்க சம்பவத்துக்கு மறுபடியும் பிள்ளையார் சுழியா? இந்த முறை மாட்டப் போவது நம்ம ஷங்கரு

புஷ்பா 2 படம் பார்ப்பதற்கு அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் ஆந்திராவில் தியேட்டர் ஒன்றில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு பெண் இறந்து விட்டார். அந்த சம்பவமே இன்னும் ஓயாத நிலையில் இப்பொழுது அடுத்த சம்பவத்திற்கு பிள்ளையார் சுழி போடுகின்றனர்.

ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர் தில்ராஜ் மற்றும் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே லண்டன் வரை சென்று பிரமோட் பண்ணி வருகிறார்கள்.

இப்பொழுது விஜயவாடாவில் இந்த படத்தின் ஹீரோ ராம்சரனுக்கு 250 அடியில் கட்டவுட் வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு பிரம்மாண்ட ப்ரோமோஷன் விழா நடக்கப்போகிறது. அந்த கட் அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுவதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுவரை எந்த ஒரு ஹீரோவுக்கும் இந்த அளவில் கட்டவுட் வைத்த தில்லையாம். இதற்கு முன்னர் சலார் படத்திற்காக நடிகர் பிரபாஸிற்கு 230 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது அப்பொழுதும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இப்பொழுது அதையும் தாண்டி 20 அடி கூடுதலாக கட்டவுட் வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சினிமா ரசிகர்கள் எல்லையற்ற ஆர்வத்தைக் காட்டி பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதுவும் ஆந்திரா, கர்நாடகா போன்ற ஸ்டேட்டுகளில் வரம்பு மீறி கொண்டாடி வருகிறார்கள். இதனால் ப்ரொமோஷன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷங்கர் மற்றும் தில்ராஜ் இருவருக்கும் ஆபத்துதான்.

Leave a Comment