ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

எரிச்சலில் ஹீரோயினை அடிக்கப் பாய்ந்த பாலா.. இயக்கிய 10 படங்களில் அதிக முறை எடுக்கப்பட்ட ஒரே காட்சி

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வணங்கான் ஆடியோ வெளியீட்டு விழாவில் கொண்டாடினார்கள். பல சுவாரஸ்யமான விஷயங்களை பாலா அதில் பகிர்ந்து கொண்டார். வெளிப்படையான பல உண்மைகளையும் தற்போது behindwoods சேனல் நேர்காணலில் பகிர்ந்து வருகிறார்.

இதுவரை அவரை கோபக்கார இயக்குனர், சூட்டிங் ஸ்பாட்டிலேயே பலரை அடித்துள்ளார் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்தனர். ஆனால் அவர் இதுவரை யாரையும் அடிக்கவில்லையாம், கோபத்தில் திட்டி உள்ளாராம், அதுவும் அவரையே அறியாமல் தான் என பேட்டியில் கூறியுள்ளார்.

வணங்கான் படத்தில் முதலில் கமிட்டானது சூர்யா மற்றும் பிரேமழு புகழ் ஹீரோயின் மம்தா பஜ்லுதான். ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டனர். சூர்யா, பாலா எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுத்து கால் சீட்டை வீரியம் செய்கிறார் என குற்றம் சாட்டினார்.

ஒரு பக்கம் ஹீரோயின் மம்தா பஜ்லுலுவை பாலா அடித்துவிட்டதால் அவரும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் மும்பையில் இருந்து வந்த அந்த ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு மாறாக ஓவர் மேக்கப் போட்டு வந்ததால் அடிக்க கை ஓங்கியதாகவும். அந்த பொண்ணு தன்னுடைய மகள் போல எனவும் behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பாலா.

பாலா இதுவரை 10 படங்கள் இயக்கி உள்ளார். அதில் அவர் அதிக முறை டேக் எடுத்துக் கொண்ட காட்சி பரதேசி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதானாம். கதைப்படி அதர்வா கீழே இருக்கும் ஹீரோயினை பார்த்து மேலே இருந்து செடிகளில் உருண்டு பிரண்டு வரும் காட்சியை 15 முறைக்கு மேல் எடுத்ததாக கூறினார்.

Trending News