அஜித் இருந்தும் கூட அடுத்தவர் பொழப்பில் மண்ணள்ளி போட்ட லைகா.. கோவிந்தாவான வீர தீர சூரன்

அதி பயங்கர பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது லைகா. பெரிய பெரிய படங்களை எல்லாம் ஒரே நேரத்தில் கமிட் செய்து தயாரித்து வருகிறது. சந்திரமுகி 2, லால் சலாம், இந்தியன் 2 என இந்த படங்களை எல்லாம் தயாரித்த அந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக சிக்கல்களை சந்தித்து வருகிறது.

லைகா பணப்பிரச்சனை காரணமாக தனது அமெரிக்கா கிளையில் இருந்து நிறைய பணியாளர்களை விடுவித்துள்ளது. தற்போது விடாமுயற்சி, மலையாள படமான எம்பிரான், விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் என மூன்று படங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.

விடாமுயற்சி படம் மட்டும் முடிந்துள்ளது. ஆனால் அதன் ரிலீஸ் இன்னும் பிரச்சனையில் இருக்கிறது. 2025 பொங்கல் வெளியீடு என்று கூறிய போதிலும் இந்த படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்பவில்லை. அதனால் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்கு வருவது கேள்விக்குறிதான்.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக இந்த படத்திற்கு ரைட்ஸ் கேட்டு ஹாலிவுட்டில் pare amount பிக்சர்ஸ் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்கள்.1997 இல் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் ரீமேக் தான் இந்த கதை, இதற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவது தெரிந்து பல படங்கள் பின்வாங்கியது.

விக்ரம் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் வீரதீரசூரன் படம் விடாமுயற்சி ரிலீஸ் ஆவதால் பொங்கல் ரேசில் இருந்து பின் வாங்கியது. இப்பொழுது விடாமுயற்சியும் வரவில்லை. இதனால் வீரதீர சூரன் படத்திற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. முறையாக அறிவித்து இருந்தால் மற்ற படங்களாவது அந்த நாட்களை குறிவைத்து ரிலீஸ் ஆகியிருக்கும் . வைககாவுடன் அஜித் இருந்தும் கூட தெளிவான முடிவில்லாமல் மற்றவர்கள் பொழப்பு வீணாகிறது.

Leave a Comment