ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

படத்தை தயாரிப்பதால் செல்வராகவனிடமே திமிர் காட்டிய ஹீரோ.. ராயன் அண்ணன் சேகருக்கு பிடித்த மதம்

செல்வராகவன் 2022ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த படமும் இயக்கவில்லை. “நானே வருவேன்” படத்தோடு இயக்குவதற்கு பிரேக் கொடுத்துவிட்டு சினிமாவில் தனக்கேற்றார் போல் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மார்க் ஆண்டனி, சொர்க்கவாசல், ராயன் என நல்ல கேரக்டர்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராயன் படத்திலும் தனுசுக்கு அண்ணனாக நடித்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த சேகர் கதாபாத்திரம் படத்தில் அனைவரையும் கவர்ந்தது. இப்பொழுது மீண்டும் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

2004ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் 7 ஜி ரெயின்போ காலனி. காதல், தந்தை மகன் பாசம் என அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்போதைய இளைஞர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். A M Rathnam இந்த படத்தை தயாரித்தார்.

படத்தில் நடித்த ஹீரோ ரவி கிருஷ்ணா ஏ எம் ரத்தினத்தின் மகன். இவருடைய ஸ்ரீ சூர்யா மூவிஸ் இந்த படத்தை தயாரித்தது. இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரவி கிருஷ்ணாவை வைத்து செல்வராகவன் இயக்கி வந்தார். படம் 40% முடிந்துவிட்டது.

ஹீரோ ரவி கிருஷ்ணா தன் தந்தை தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என படப்பிடிப்பில் ஓவர் ஆட்டம் போட்டுள்ளார். முன்னுக்கு பின்னாக இயக்குனர் செல்வராகவனிடமும் பேசியுள்ளார். இருவருக்கும் அடிக்கடி ஈகோ சண்டையும் வந்துள்ளது. இஷ்டத்துக்கு படப்பிடிப்புக்கு மட்டம் போட்டு வந்துள்ளார் ரவி கிருஷ்ணா.

ஒரு கட்டத்துக்கு மேல் படத்தில் இருந்து பின்வாங்கி விட்டார் செல்வராகவன். தற்போது தான் ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து இயக்கும் அடுத்த படத்தை எடுக்க வந்துவிட்டார். “மெண்டல் மனதில்” என்ற ஒரு படத்தை ஜி வியை வைத்து எடுத்து வருகிறார். அதன் ஷூட்டிங் வேலைகளில் இறங்கிவிட்டார் செல்வராகவன்.

Trending News