Bigg Boss Tamil8: தன்னம்பிக்கைக்கும், தல கனத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என்று சொல்வார்கள். இது முத்துக்குமரன் மற்றும் அவருடைய கூட்டணிகளுக்கு சரியாகப் பொருந்தி விடும் போல.
பிக் பாஸ் எட்டாவது சீசன் இன்னும் ஒன்று இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. வழக்கம் போல டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்று ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
தீபக், மஞ்சரி, முத்துக்குமரன், சௌந்தர்யா போன்றவர்கள் கண்டிப்பாக பைனல் லிஸ்ட் ஆக வந்து விடுவார்கள்.
தங்களுடைய குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து சென்றது, ஆடியன்ஸ்களிடம் கிடைக்கும் கைதட்டல்களை வைத்து ஓரளவுக்கு தங்களுடைய ஆதரவை கனித்து விட்டார்கள்.
சூசகமாக சோழி உருட்டும் முத்து&கோ
எந்த நிமிஷத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். அதை மாற்ற முடியாமல் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை முத்துக்குமரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மஞ்சரி மற்றும் ஜாக்குலின் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது கேமரா முன்னாடி வேண்டும் என்றே வந்து நின்று ஒரு போட்டியாளரை பற்றி பேசுவது.
அவர் இதற்கு முன்பு வீட்டிற்குள் என்னவெல்லாம் தவறு செய்தாரோ அதை சுட்டிக் காட்டுவது என்று இயல்பாக பேசுவது போல் ஒரு நாடகம் நடிக்கிறார்கள்.
வீட்டை சுற்றி கேமரா இருக்கிறது என்று தெரிந்து, கேமரா முன்னாலேயே சரியாக வந்து நின்று தங்களுக்குள் ரகசியம் பேசுவது போல் பண்ணுவதெல்லாம் பார்க்க சகிக்கவில்லை.
இவ்வளவு நாட்கள் உள்ளிருந்து கொண்டு இப்போது சூசகமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் கிடைத்த ஆதரவை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.