ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ஈஸ்வரி.. கோபி எடுத்த அதிரடி முடிவு, பாக்கியாவுடன் கைகோர்க்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ராதிகா பிரிஞ்சு போகிறார் என்று பாக்யாவிற்கு தெரிந்து விட்டது. அதனால் கோபி மீது என்ன தவறு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பாக்கியா, கோபிக்கு சில அறிவுரைகளை கூறினார். உடனே கோபி தன் மீது தவறு இருக்கிறது என்று உணர்ந்து ராதிகாவை தேடி பேச போய்விட்டார்.

ஆனால் ஈஸ்வரி இனியா மற்றும் செழியனுக்கு பாக்யா சொன்னதில் விருப்பம் இல்லாததால் கோபமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராதிகா புது வீட்டுக்கு போனதும் மயூ மற்றும் ராதிகாவும் கவலையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அங்கே போன கோபியை பார்த்ததும் மயூ சந்தோசத்தில் டாடி என்று ஒட்டிக் கொண்டார்.

பிறகு கோபி, என் மேலே எவ்வளவு தவறு இருக்கிறது என்று எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இனிமேலும் உன்னையும் மயூவையும் கஷ்டப்படுத்த மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி போயி ரொம்ப நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை என்ற பதட்டத்தில் ஈஸ்வரி, கோபிக்கு போன் பண்ண ஆரம்பித்து விட்டார்.

கோபி நான் ராதிகா வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி எப்பொழுது வருவ, கிளம்பிட்டியா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். எனக்கு கொடுத்த சத்தியம் ஞாபகம் இருக்கிறது தானே, அப்பா போன பிறகு நீ வந்த பின்பு தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அந்த சந்தோசம் நீ என்னுடன் இந்த வீட்டில் இருந்தால் தான் எனக்கு கிடைக்கும் என்று ஈஸ்வரி செண்டிமெண்டாக பேசுகிறார்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு போனை வைத்த கோபி, ராதிகாவிடம் எல்லாத்துக்கும் நான் இப்பொழுது ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லி மயூ நீயும் கிளம்பி என்னுடன் வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் ராதிகாவின் அம்மா மற்றும் கோபி சமாதானப்படுத்தி ராதிகாவையும் மயூவை கூட்டி கிளம்பி விட்டார்.

இதை எதிர்பார்க்காத ஈஸ்வரிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போகிறது. அத்துடன் இனி அந்த வீட்டில் பாக்கியவுடன் கைகோர்த்து ராதிகா கோபியுடன் வாழ போகிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஈஸ்வரி வைத்தெரிச்சல் படப் போகிறார். ஒழுங்கா இருந்த கோபியிடம் சத்தியம் வாங்கி தனக்குத்தானே ஈஸ்வரி சூனியம் வைத்துக்கொண்டார்.

அந்த வகையில் கோபி எடுத்த அதிரடி முடிவால் ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் முகத்தில் இனி சந்தோஷமே இருக்காது. அத்துடன் இத்தனை நாளாக இவங்க மூன்று பேரும் சேர்ந்து ராதிகாவுக்கு கொடுத்த டார்ச்சரால் இனி ஒவ்வொரு நாளும் ராதிகாவிடம் அனுபவிக்கப் போகிறார்கள்.

Trending News