ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

2025ல் ரிலீஸ் ஆகும் டாப் ஹீரோக்களின் படங்கள்.. விடாமுயற்சி முதல் தளபதி 69 வரை

2025 Movie Release: எப்படியோ 2024 ஒரு வழியாக முடிவடைந்து விட்டது. நாளை புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

அதேபோல் இந்த வருடம் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கும் என்ற விவாதங்களும் தொடங்கிவிட்டது. அதன் படி 2025ல் டாப் ஹீரோக்கள் அனைவரின் படங்களும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு ஹீரோவின் படம் வெளியாகாமல் இருக்கும். ஆனால் இந்த 2025 அப்படி கிடையாது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி வெளியாகிறது. அது மட்டும் இன்றி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

விடாமுயற்சி முதல் தளபதி 69 வரை

அதேபோல் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் ஜனவரி இறுதியில் வெளியாகிறது. மேலும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதை போல் கமலின் தக் லைஃப் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.

இந்தியன் 3 படமும் வெளியாக உள்ளது. சூர்யாவுக்கு ரெட்ரோ விஜய்க்கு தளபதி 69 கார்த்திக்கு சர்தார் 2 போன்ற படங்களும் 2025 இல் வெளியாகிறது.

அதேபோல் தனுஷ் நடித்து வரும் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களும் வரும் வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சிவகார்த்திகேயனை பொருத்தவரையில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரின் படங்கள் கைவசம் இருக்கிறது.

அந்த படங்களும் 2025-ல் அடுத்தடுத்து வெளிவரும். சிம்புவுக்கு கமலுடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படம் தான் கைவசம் உள்ளது.

விஜய் சேதுபதி டிரெயின், Ace, காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

இப்படியாக அடுத்த வருடம் அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் தான். ஆனால் பாக்ஸ் ஆபிஸை யார் திணறடிக்க போகிறார்கள் என்பதுதான் பெரும் சுவாரஸ்யம்.

Trending News