ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

எங்கப்பா சூர்யா, இத பத்திலாம் வாயே திறக்க மாட்டாரா?. சாட்டையடி கேள்வி கேட்ட அரசியல்வாதி

Suriya: நடிகர் சூர்யாவுக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி தான் போல. ஏற்கனவே கங்குவா படத்தால் போதும் போதும் என்கிற அளவுக்கு விமர்சிக்கப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் அரசியல்வாதி ஒருவர் மீண்டும் சூர்யாவை எல்லோரும் விமர்சிக்கும் அளவுக்கு தூண்டில் ஒன்றை போட்டு இருக்கிறார்.

காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யா ரொம்பவும் தைரியமாக நீட் தேர்வு பற்றி பேசியிருந்தார். அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக கட்சி.

சாட்டையடி கேள்வி கேட்ட அரசியல்வாதி

அந்த சமயத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் சூர்யா நீங்க சினிமாவுல நிறைய ஜெயிக்கணும் அதுக்கப்புறம் அரசியல் கருத்து சொல்லுங்க என அறிவுறுத்தி இருந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் சூர்யா அடுத்த அரசியலுக்கு வருவார் என்று கூட பேசப்பட்டது. தற்போது இந்த விஷயத்தை மக்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார் அதிமுகவின் முக்கிய தலைவர் செல்லூர் ராஜு.

அன்னைக்கு நீட் தேர்வு பற்றி பேசிய சூர்யா இன்னைக்கு ஏன் அண்ணா யுனிவர்சிட்டியில் நடந்த கொடுமை பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறார்.

இதுவும் மாணவர்களுக்கு எதிராக நடந்த பிரச்சனை தானே என கேள்வி கேட்டிருக்கிறார். சினிமா பிரபலங்களை பொருத்தவரைக்கும் சமூக பிரச்சனைகளுக்கு வாயை திறக்காமல் இருந்து விட வேண்டும்.

அப்படி வாயை திறந்து விட்டால் அடுத்தடுத்து இதுக்கு ஏன் கேள்வி கேட்கல, அப்போ இந்த கட்சியோட ஆதரவாளரா நீங்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

கோயில்களுக்கு செலவு செய்வதே ஹாஸ்பிடல் மற்றும் பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என ஒரு முறை சூர்யாவின் மனைவி ஜோதிகா பேசியிருந்தார்.

இப்போது அவர் கோயில் கோயிலாக சுற்றும் பொழுதும் இதே கருத்து சொல்லப்பட்டு வருகிறது. போகிற போக்கை பார்த்தால் சினிமா பிரபலங்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் வாயை திறக்க முடியாமல் போய்விடும் போல.

Trending News