திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நான்கு மருமகள்களும் ஒன்றாக சேர்ந்து போட்ட கூட்டணி.. ஆதிரை கேரக்டரை நைசாக தூக்க ஜீவானந்தம் போட்ட பிளான்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று குணசேகரின் அம்மா விசாலாட்சி குடும்பத்தில் இருப்பவர்களிடம் கெஞ்சினார். அதன்படி தர்ஷன் நேரடியாக ஈஸ்வரியை பார்த்து கூப்பிட்டார். ஆனால் தர்ஷன் பேசிய பேச்சுக்கு ஈஸ்வரி வர முடியாது என்று சொல்லிவிட்டார். அத்துடன் விசாலாட்சி, ஈஸ்வரிடம் போன் பண்ணி உன்னை பார்க்க வேண்டும் என்று கெஞ்சினார்.

உடனே ஜீவானந்தம் கொடுத்த அட்வைஸின்படி தர்ஷணியை கூட்டிட்டு ஈஸ்வரி, குணசேகரன் வீட்டிற்கு போய்விட்டார். போனதும் ஈஸ்வரியை பார்த்ததும் கதிர் வாய்க்கு வந்தபடி தேவையில்லாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார். இதனைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத சக்தி, கதிர் கன்னத்தில் பளார் என்று அறைந்து காலால் மிதித்து தள்ளிவிட்டார்.

இந்த அவமானத்தை தாங்க முடியாத கதிர் எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்த நந்தினிக்கும் ரொம்பவே வருத்தமாக போய்விட்டது. பிறகு விசாலாட்சி, ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்டு என்னுடன் கடைசி காலம் வரை என் கூடவே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே ஈஸ்வரியும் சரி என்று சொல்லிவிட்டார்.

ஆனால் நந்தினி மற்றும் ரேணுகா, ஈஸ்வரி எடுத்த முடிவு தவறு என்று சொல்லி வீட்டை விட்டு போக சொல்கிறார்கள். உடனே ஜனனி அவர்களுக்கு எடுத்து சொல்லி ஈஸ்வரி எடுத்த முடிவுக்கு பின் இருக்கும் நியாயத்தையும் பார்க்க சொல்கிறார். இதனை அடுத்து மறுபடியும் இந்த நான்கு மருமகள்களும் சேர்ந்து கூட்டணி போடும் அளவிற்கு ஒரே வீட்டில் ஒற்றுமையாகி விட்டார்கள்.

இதற்கு இடையில் கதிரை அடித்ததற்கு சக்தி, நந்தினி இடம் மன்னிப்பு கேட்டார். நந்தினி, நீ அடித்தது எனக்கு வருத்தமாக இருந்தாலும், அவன் பேசிய வார்த்தைக்கு நீ தண்டனை கொடுத்து இருக்கிறாய். அதனால் அந்த விஷயத்தை நான் அப்பொழுதே மறந்து விட்டேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். இருந்தாலும் நந்தினிக்கும் மனசில் ஒரு ஓரமாக அந்த வருத்தம் இருக்க தான் செய்கிறது.

இதனை தொடர்ந்து கதிர், முழுசாக திருந்தவும் முடியாமல், பழைய மாதிரி ரவுடித்தனமாகவும் இருக்க முடியாமல் இரண்டு கிட்ட நிலைமையில் இருக்கிறார். இதில் ஞானமாவது கொஞ்சம் மனசாட்சியோடு அவ்வப்போது பேசிக் கொண்டு வந்தார். ஆனால் தற்போது எல்லா மனசாட்சியும் அடகு வைத்து விட்டார் என்பது போல் வார்த்தையால் பேசி ஓவராக கொந்தளிக்கிறார்.

இவங்கதான் இப்படி என்றால் ஆதிரையும் தற்போது எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியாமல் வீட்டில் இருக்கும் நான்கு மருமகளிடமும் கோபமாக பேசுகிறார். அத்துடன் ஆதிரை நல்லவங்களா கெட்டவங்களா என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் ஆதிரையின் கேரக்டர் இருக்கிறது. அந்த வகையில் ஆதிரை மூலமாக பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி அவருடைய கேரக்டரை மொத்தமாக தூக்கி விடலாம் என்று இயக்குனர் ஒரு விதத்தில் பிளான் வைத்திருக்கிறார்.

ஏனென்றால் ஆதிரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் என்ற புத்தம்புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவும் முடியாது. இவருடைய கேரக்டருக்கு பதிலாக இன்னொரு ஆர்டிஸ்ட்டையும் போட முடியாது என்பதால் இவருடைய கேரக்டருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என அதற்கேற்ற மாதிரி கதையை கொண்டு வருகிறார்கள். எது எப்படியோ இப்போ குணசேகரன் வெளியே வந்தால் தான் நாடகத்திற்கான கதை இருக்கிறது என்பதால் கூடிய சீக்கிரம் குணசேகரின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.

Trending News