ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

தோல்வியடைந்த கயல் சீரியலை ஓரங்கட்ட போகும் சன் டிவி.. ரோஜா 2 சீரியலுக்கு நேரம் வந்தாச்சு

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து எக்கச்சக்கமான சீரியல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த அளவுக்கு சன் டிவியில் உள்ள சீரியல் வெற்றிகரமாக ஓடுவதற்கு முக்கிய காரணம் ஏதாவது ஒரு சீரியல் மக்களிடம் ரீச் ஆகவில்லை என்றால் அந்த சீரியலை தூக்கிட்டு அதற்கு பதிலாக இன்னொரு சீரியலை கொண்டு வந்து விடுவார்கள்.

அப்படி தான் தற்போது கயல் சீரியலுக்கும் நிலைமை வந்திருக்கிறது. அதாவது தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்த கயல் சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்திற்கு பின் தங்கி போயிருக்கிறது. இதற்கு காரணம் பிரச்சனைகளை மட்டும் தொடர்ந்து கயல் சந்தித்து வருவதாலும், கதையே இல்லாமல் அரைத்து மாவையே அரைப்பதாலும் இந்த நாடகத்தின் மீதான விறுவிறுப்பு குறைந்துவிட்டது.

இன்னும் அடுத்து ஒரு சில வாரங்களில் இந்த நாடகம் ஏழாவது எட்டாவது இடத்திற்கு போய் தோல்வியை சந்தித்து விடும். அதனால் இந்த சீரியலை ஓரங்கட்டி விட்டு இதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை கொண்டு வந்து விடுவார்கள். அந்த வகையில் ஏற்கனவே முதல் பாகம் ஹிட்டானதால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார்கள்.

ரோஜா 2 சீரியல் மதி மலராக நியாஸ் மற்றும் பிரியங்கா நல்காரி களமிறங்க போகிறார்கள். இதில் மலர் என்ற கேரக்டர் முதல் பாகத்தின் ரோஜாவாக இருந்தவருக்கு மகளாக பிறந்திருக்கிறார். இதனுடைய தொடர்ச்சியாக தான் இரண்டாம் பாகம் கதை நகர போகிறது.

ஆனால் அதற்கு முன் இந்த நாடகத்திற்கான நேரம் சரியாக அமையாததால் சரிகமப அவர்களுடைய சேனலில் ஒளிபரப்பு செய்யலாம் என்று முடிவெடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது அதற்கு அவசியமே இல்லாத அளவிற்கு கயல் சீரியல் மக்களிடம் தோற்றுப் போய்விட்டதால் இந்த சீரியலை ஓரங்கட்டி விட்டு ரோஜா 2 சீரியல் கூடிய விரைவில் வரப்போகிறது.

Trending News