ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஈஸ்வரியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டப்போகும் பாக்கியா.. திருந்திய கோபியுடன் சந்தோஷமாக வாழும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா சொன்னதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. சரியாகவும் இருக்கிறது என்று புரிந்து கொண்ட கோபி நேரடியாக ராதிகாவை சந்தித்து பேசினார். அப்படி பேசிய பொழுது ராதிகாவிடம் என் மீது நிறைய தவறு இருக்கிறது. அதை நான் உணர்ந்து விட்டேன், தற்போது அதையெல்லாம் சரி செய்யும் விதமாக நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறுகிறார்.

அதற்கு ராதிகா என்ன என்று கேட்ட நிலையில், நீயும் மயூ சேர்ந்து என்னுடன் கிளம்பி வீட்டுக்கு வர வேண்டும். கொஞ்ச நாளைக்கு அம்மாவுக்காக நாம் அங்கே இருக்கலாம். அதன் பிறகு நாம் அனைவரும் இங்கே திரும்ப வந்துவிடலாம் என்று ராதிகாவை சமரசம் பண்ணி கூப்பிடுகிறார்.

ஆரம்பத்தில் போக வேண்டாம் என்று முடிவு எடுத்த ராதிகா தற்போது கோபி கெஞ்சியதும் மனசு மாறி கோபி பின்னாடியே கிளம்பிவிட்டார். அதன்படி பாக்யா வீட்டிற்கு கோபி, ராதிகா மற்றும் மயூவை கூட்டிட்டு வந்து விடுகிறார். இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி அப்படியே அதிர்ச்சியாகி நிற்கிறார்.

ஆனாலும் பாக்கியா இதற்கு சம்மதிக்க மாட்டார் என்ற ஒரு தெனாவட்டில் ஈஸ்வரி அமைதியாக நின்னு வேடிக்கை பார்த்தார். அங்கே தான் பாக்கியா, ஈஸ்வரிக்கு ஒரு ஆப்பையும் வைத்து விட்டார். அதாவது நீங்களும் உங்க குடும்பமும் இங்கே தங்க வேண்டும் என்றால் எனக்கு அதற்கான வாடகை தர வேண்டும்.

அப்படி வாடகை தந்துவிட்டால் நீங்கள் தாராளமாக இங்கே தாங்கிவிடலாம் என்று பாக்யா சொல்லிவிட்டார். கோபியும் இதுதான் சான்ஸ் என்று சந்தோஷத்தில் ஓகே சொல்லிவிட்டார். அந்த வகையில் ராதிகா மற்றும் பாக்கிய இருவரும் சேர்ந்து சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்து கோபி சந்தோஷத்தில் குஷியாகிவிட்டார்.

அத்துடன் ராதிகா மற்றும் பாக்யாவின் ஒற்றுமையை பார்த்து ஈஸ்வரி வைத்தெரிச்சல் பட ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் பாக்யாவிடம் எதற்காக ராதிகாவை அடுப்பாங்கரையில் சமையல் செய்வதற்கு அனுமதி கொடுத்தாய் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா, அவங்க வாடகை கொடுக்கிறாங்க, அதனால் சமைக்கிறாங்க இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று சொல்லி ஈஸ்வரி கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.

இன்னும் இதோட நிறுத்தப் போவதில்லை இதற்கு மேலேயும் இருக்கிறது எங்களுடைய ஆட்டம் என்று சொல்லும் அளவிற்கு பாக்கியம் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து ஈஸ்வரியை அல்லல் படுத்தப் போகிறார்கள். அத்துடன் திருந்திய கோபிக்காக ராதிகாவும் இன்னொரு சான்சை கொடுத்த நிலையில் இனி இவர்களுடைய சந்தோசமும் ஒற்றுமையும் நீடித்து நிற்கப்போகிறது.

Trending News