ரெட் ஜெயன்ட் பொங்கல் ரிலீசுக்கு குறி வைக்கும் 3 படங்கள்.. டோட்டலா அப்செட் பண்ணிய அஜித் அண்ட் கோ 

2025பொங்கல் பண்டிகை செவ்வாய் கிழமை வருகிறது. அதனால் எப்படி பார்த்தாலும் பத்து நாட்கள் லீவு கிடைக்கும். இந்த நேரத்தில் பெரிய படங்கள் ரிலீஸ் செய்வதால் நல்ல ஒரு  லாபத்தை பார்த்து விடலாம். இதனை குறிவைத்து எப்பொழுதுமே  தியேட்டர்கள் பெரிய படங்களை எதிர்பார்த்து இருக்கும் .

 இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி படம் வருவதாக இருந்து இப்பொழுது பின்வாங்கி விட்டது. இதனால் அடுத்த இடத்தில் ரிலீசுக்கு காத்திருக்கும் மூன்று படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் குறிவைத்து வருகிறது. விடா முயற்சி படம் விலகியதால் தாராளமாக ரிலீஸ் செய்யலாம் என தற்சமயம் ரேசில் இறங்கும் படங்கள்

 வணங்கான்: பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் இந்த படம் ஏற்கனவே ரிலீஸ் லிஸ்டில் தான் இருந்தது. ஆனால் விடாமுயற்சி வருவதால், எங்கே நமக்கு ஏதேனும் பாதிப்பை   ஏற்படுத்தி விடுமோ என யோசனையில் இருந்த படக்குழு இப்பொழுது டபுள் ஹேப்பி மூடில் களம் இறங்குகிறது.

காதலிக்க நேரமில்லை: உதயநிதியின் மனைவி கிருத்திகா  அவர்கள் முதன்முதலாக ஒரு இயக்குனராக களம் இறங்கிய படம்  இது. இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார். இந்த படம்  விடாமுயற்சி படத்தால் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இப்பொழுது தாராளமாக களமிறங்க காத்திருக்கிறது.

வீர தீர சூரன்: விக்ரம் ஒரு வருடமாக இந்த படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால்  தியேட்டர்கள் பிரச்சனையால் இந்த படம் தள்ளிப்போனது . ஆனால் இப்பொழுது ரேஸுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment