செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மகாநதி சீரியலில் பொண்டாட்டியை சீண்டி பார்க்கும் விஜய்.. விவாகரத்தை நினைத்து பயத்தில் உளறி தவிக்கும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா வந்த பிறகு விஜய் மற்றும் காவிரிக்குள் தொடர்ந்து விரிசல் வந்து கொண்டே இருந்தது. அதிலும் இந்த ராகினி ஆட்டத்திற்குள் புகுந்து ஒரேடியாக விஜய் மற்றும் காவிரியை பிரித்து விட வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாத காவிரி ஒவ்வொரு நாளும் பயத்தில் விஜய் நம்மை விட்டு போய்விடுவாரோ என்ற பதட்டத்திலேயே இருக்கிறார். ஆனால் விஜய்க்கு துளி கூட அப்படி ஒரு எண்ணம் இல்லாத பொழுது காவிரி தன்னை நினைத்து பீல் பண்ணுகிறார் என்று தெரிந்தும் விஜய், காவேரியை சீண்டி பார்க்கும் விதமாக சில விஷயங்களை பேசுகிறார்.

இருந்தாலும் தாத்தா கொடுத்த அட்வைஸ் படி காவேரி உடன் கொஞ்சம் நேரம் நேரத்தை செலவழிக்கலாம் என்று காரில் கூட்டிட்டு போய்க் கொண்டிருக்கிறார். அப்பொழுது விஜய், காவிரியிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார். இருந்தாலும் காவேரி, விஜயை நோகடிக்கும் விதமாக வெண்ணிலாவை பற்றி கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தி விட்டார்.

உடனே விஜய், உன்னுடன் பேச நினைத்து உன்னை தனியாக கூட்டிட்டு வந்தா நீ ஏன் தேவையில்லாமல் வெண்ணிலவை பற்றி கேள்வி கேட்டு என்னை டென்ஷன் படுத்துகிறாய் என்று சொல்கிறார். அதற்கு காவேரி அந்த வெண்ணிலா கூட சேரனும் என்பதற்காகத் தானே என்ன விவாகரத்து பண்ணிக்கிறீங்க என்று கேட்கிறார்.

இப்பொழுது விஜய்க்கு தெரிந்து விட்டது காவேரி தன்னை தவறாக புரிந்து இருக்கிறார் என்று. அந்த சமயத்தில் கூட விஜய் உண்மையை சொல்லாமல் காவிரியை சீண்டிப் பார்க்கும் விதமாக மௌனமாகிவிட்டார். பிறகு ஆபீஸில் லாயர் வந்து காத்துக் கொண்டிருக்கிறார் கையெழுத்து போடணும் என்று காவிரியை ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய் விடுகிறார்.

அங்கே வந்த லாயர் மனசு ஒத்துப் போய் விவாகரத்து கேட்டு கையெழுத்து போட்டால் எளிதாக விவாகரத்து வாங்கிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் காவிரி இன்னும் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் விஜய் ஒரு நிமிஷம் கூட காவிரி இல்லாமல் இருக்க மாட்டார். இது தெரியாத காவிரி நம்மளை விட்டு விஜய் போய்விடுவாரோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.

இதை தெரிந்தும் விஜய் காவிரிக்கு எந்தவித விளக்கமும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். என்னதான் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் இருந்தாலும் காவேரி மற்றும் விஜய் ஒருவரை ஒருவர் பேசாமல் தனியாக போகாமல் இருப்பதே சந்தோஷமாக இருக்கிறது.

ஒருத்தருக்கு மீது ஒருத்தர் அளவுகடந்த அன்பும் காதலும் இருக்க போய் தான் தற்போது இரண்டு பேரும் முட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஒரேடியாக தீர்வு காணும் விதமாக விஜய் அவர் மனதில் இருப்பதை தெள்ளத்தெளிவாக காவேரி இடம் சொல்ல வேண்டும்.

Trending News