செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

திருமுருகன் இயக்கும் சீரியலுக்கு ஹீரோவாக கமிட்டான யூடியூப் பிரபலம்.. எதிர்நீச்சலுக்கு டஃப் கொடுக்க வரும் புது சீரியல்

Sun Tv Serial: இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாடகங்கள் மக்களிடம் அதிக அளவில் கவனத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணம் அவருடைய சீரியல்களில் வில்லன் வில்லிகள் என யாரையும் பெரிசாக சொல்லும்படி கொண்டு வர மாட்டார். குடும்பத்தை மையமாக வைத்து அதில் வரும் பிரச்சினைகளையும் சின்ன சின்ன சண்டைகளையும் சமாளிக்கும் விதமாக கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி அனுசரித்துப் போக வேண்டும் என்பதுதான் முக்கிய கதையாக இருக்கும்.

இதுதான் திருமுருகன் இயக்கிய சீரியலின் வெற்றி ரகசியம் கூட சொல்லலாம். அதனால் தான் இந்த காலத்தில் அவருடைய கதைக்கு அதிக அளவில் மவுஸ் இருக்கிறது. அந்த வகையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கூடிய விரைவில் சந்திக்கிறேன் என்று அவருடைய யூடியூப் சேனலில் அப்டேட் கொடுத்திருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாயிருக்கும் தகவல் என்னவென்றால் திருமுருகன் இயக்கும் சீரியலுக்கு புதுசாக ஒரு யூடியூப் பிரபலம் கமிட்டாக இருக்கிறார். அவர் யார் என்றால் அனு செல்வா அபிஷியல் என்ற youtube சேனல் மூலம் பல ரீல்ஸ்களை போட்டு பிரபலமாக இருக்கிறார். அவர்தான் திருமுருகன் இயக்கப் போகும் சீரியலில் என்டரி கொடுக்கப் போகிறார்.

மேலும் திருமுருகன் இயக்கப் போகும் நாடகத்திற்கு எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே மாதிரி திருச்செல்வம் இயக்கும் நாடகத்திற்கும் மக்களிடத்தில் நல்ல ரீச் இருக்கும். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் மறுபடியும் துவங்கியிருக்கிறது. இதற்கு டஃப் கொடுக்கும் வகையில் திருமுருகன் இயக்கப் போகும் புது சீரியல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News