செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கோபி மனசுக்குள் புகுந்த பாக்கியா.. EX பொண்டாட்டியை பற்றி பெருமையாக பேசியதால் பரிதவிக்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசையுடன் பாக்யா வீட்டிற்கு ராதிகா கிளம்பிவிட்டார். ஆனால் ராதிகாவை பிடிக்காத ஈஸ்வரி எப்படியாவது வீட்டை விட்டு ராதிகாவை வெளியே அனுப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் பாக்கியா மூலம் ஏதாவது செய்யலாம் என்று ஈஸ்வரி நினைத்தார்.

ஆனால் பாக்கியா, எனக்கு கோபி ராதிகா மயு இங்கு இருப்பதில் எந்தவித கஷ்டமும் இல்லை. ஆனால் என் வீட்டில் தங்க வேண்டும் என்றால் வாடகை கொடுத்து தான் தங்க வேண்டும் என்று சொல்லி கோபியிடம் வாடகை வாங்கி விட்டார். ஆனால் மயூ தனியாக தூங்க பயப்படுவார் என்ற காரணத்திற்காக பாக்யா மயூடன் சேர்ந்து தூங்க கிளம்பி விட்டார்.

இதனால் இனியா தனியாக தூங்கும்படி ஆகிவிட்டது. இருந்தாலும் இனியாவிற்கு நான் ஏன் விட்டுக் கொடுக்கணும், என்னாலலாம் எங்க அம்மாவை விட்டுக் கொடுக்க முடியாது என்ற நினைப்பில் நடுராத்திரியில் எழுந்து போய் பாக்கியவுடன் தூங்கிக் கொண்டார். பிறகு ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு ராதிகா மற்றும் பாக்யா தனித்தனியாக சமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் ராதிகா உப்புமா செய்து கோபி மற்றும் மயூக்கு கொடுக்கிறார். அதே நேரத்தில் பாக்யா, இட்லி சாம்பார் சட்னி என வகை வகையாக சமைத்து ஈஸ்வரி செழியன் மற்றும் இனியாவிற்கு பரிமாறுகிறார். இதை பார்த்து கோபிக்கும் பாக்கியா கையால் சமைத்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.

இதை காரணமாக வைத்து ஈஸ்வரி அவ்வப்போது ராதிகாவுக்கு என்ன சமைக்கத் தெரிகிறது, ஒரு காபி கூட போடத் தெரியுதா? அவள் சிரித்து நான் பார்த்ததே கிடையாது எப்படி தான் அவ கூட குடும்பம் நடத்துறியோ என்று கோபியிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இதற்கிடையில் ராதிகா மற்றும் கோபி ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அப்பொழுது கோபி, முழுக்க முழுக்க பாக்யாவை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு ராதிகாவை கொஞ்சம் கூட யோசிக்காமல் பாக்யா இஸ் கிரேட். நான் பாக்யாவின் திறமை இப்படி இருக்கும் என்று ஒரு நாள் கூட நினைச்சு பார்த்ததே இல்லை.

உண்மையிலேயே பாக்யா மாதிரி ஒரு ஆளை பார்க்கவே முடியாது என்று பாக்யாவின் புராணமாக பெருமையாக பேசிக் கொண்டே இருக்கிறார். இப்படி கோபி பேச பேச ராதிகாவின் முகம் மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் மனசுக்குள் மிகப்பெரிய வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ராதிகாவும் கண்டு கொள்ளாமல் போய்விட்டார்.

ஆனால் இப்படியே கோபி, வாயைத் திறந்தாலே பாக்கியா தான் என்று பேச ஆரம்பித்து விட்டால் ராதிகா கோபியிடம் உங்க மனசில் கொஞ்சம் கூட நான் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. அதனால் இனியும் உங்களுடன் இந்த வீட்டில் இருப்பது எனக்கு விருப்பமில்லை என்று கூடிய விரைவில் கோபிக்கு tata காட்டிவிட்டு மயூவை கூட்டிக்கிட்டு கிளம்பி விடுவார்.

Trending News