செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் குணசேகரன்.. பகடைக்காயாக சுற்றும் தம்பிகள், ஜனனி எடுக்கப் போகும் முடிவு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வெளியே வரவேண்டும் என்று ஜெயிலுக்குள் இருந்து பிளான் பண்ணி விட்டார். அதன்படி குணசேகரன் இன்னும் கூடிய விரைவில் வெளியே வந்து விடுவார். ஆனால் அதற்கு முன் ஞானம் எதற்கும் உதவாமல் கையில் பைசா இல்லாமல் பைத்தியக்காரர் மாதிரி சுற்றி திரிவதால் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாத அளவிற்கு மூளை குழம்பி விட்டது.

அத்துடன் குணசேகரன் நம்மளை பார்க்க அனுமதி கொடுக்க மாட்டார் என்ற கோபமும் இருந்ததால் ரேணுகாவின் போஸ்டரை பார்த்து உச்சகட்ட கோபத்தில் வீட்டிற்கு போய் ஆக்ரோஷமாக தகாத வார்த்தைகளை பேசி கொந்தளித்து விட்டார். உனக்கு ஏன் இவ்வளவு ரோஷம் ஒன்றுக்கும் ஆகாத உனக்கு இவ்வளவு இருக்கிறது என்றால் நீ பட்ட கஷ்ட நஷ்டங்களை நான் சரி செய்ய வேண்டும் என்று போராட நினைக்கும் எனக்கு எவ்வளவு வீராப்பு இருக்கும்.

யாரோ சொன்னாங்கன்னு வீட்ல வந்து என்னை இப்படி எல்லாரும் முன்னாடி அவமானப்படுத்தி பேசுறியே, நீ எல்லாம் சரியான ஆம்பளையாக இருந்தால் முதலில் சொந்தமாக சம்பாதித்து பணத்தை மூஞ்சில் தூக்கி ஏறி அதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று வெத்துவிட்டாக சுற்றிக் கொண்டிருக்கும் ஞானத்திடம் நாலு கேள்வி நறுக்கு என்று ரேணுகா கேட்டு விட்டார்.

அப்பொழுது கூட ஞானத்துக்கு புத்தி இல்லாமல் அண்ணன் வருவான் சொத்து தருவான் என்ற நம்பிக்கையில் சொத்தை கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் கதிரும் வட்டிக்கு வாங்கி பணத்தை செலவு செய்ததால் அந்தக் கடனையும் கொடுக்க முடியாமல் அல்லல்பட்டு வருகிறார். இதனால் சொத்து நமக்கு வந்து சேர வேண்டும் என்று கதிர் மற்றும் ஞானம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி வீட்டுக்குள் தொடர்ந்து ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் வரும் இந்த நேரத்தில் குணசேகரன், வெளியில் இருக்கும் தம்பிகளை வைத்து மறுபடியும் ஆணாதிக்கம் பண்ண தயாராகி விட்டார். அதாவது தற்போது நாம் இல்லாத கஷ்டம் எப்படி இருக்கும் என்று ஞானத்துக்கும் கதிருக்கும் நன்றாகவே உணர்ந்திருக்கும்.

அதனால் இனி அவர்களை நம் கைக்குள் வைத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கலாம் என்ற நினைப்பில் ஆடு புலி ஆட்டம் ஆட தயாராகி விட்டார். ஆனால் குணசேகரன் நினைக்கும் எந்த விஷயமும் நடக்க கூடாது என்பதில் தீவிரமாக ஜனனி இருக்கிறார். அந்த வகையில் குணசேகரன் வெளியே வராதபடி ஜாமின் கிடைக்கக் கூடாது என்று ஈஸ்வரி மூலம் செக் வைக்கப் போகிறார்.

Trending News