செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியான அர்ஜுன்.. ஸ்ருதிகாவுக்கு கொடுத்த தரமான அட்வைஸ்

Shruthika Arjun: இந்த வருடம் தமிழ் பிக்பாஸை விட ஹிந்தி பிக்பாஸை பார்ப்பதில் தான் நம் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஸ்ருதிகா என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அனைவரும் விரும்பும் ஒரு போட்டியாளராக இவர் இருந்து வருகிறார். அதுவே அவருக்கான ரசிகர்களை அதிகப்படுத்தி இருக்கிறது.

இறுதி நாளுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வருகின்றனர். அதில் ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவரைப் பார்த்ததும் எமோஷனலான ஸ்ருதிகா ஓடி வந்து கட்டிப்பிடித்து கதறிய காட்சிகள் எல்லாம் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல் அவருடைய மகன் ஆரவ் வீட்டுக்குள் வந்த ப்ரோமோவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியான அர்ஜுன்

இது எல்லாவற்றையும் விட அர்ஜுன் தன் மனைவிக்கு கொடுத்த தரமான அட்வைஸ் தான் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து உன் விளையாட்டு நல்லா இருக்கு.

அதேபோல் இங்கு உனக்கு இருக்கும் பிரண்ட்ஷிப் ஓகே தான். ஆனால் போன வாரம் நீ கேமில் கவனம் செலுத்தவில்லை. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கிறது.

இப்போது நீ உனக்காக விளையாட வேண்டும். இது உனக்கான நேரம் பிரண்ட்ஷிப்பை ஓரம் கட்டி விட்டு விளையாடு என சரியான அட்வைஸை கொடுத்திருக்கிறார்.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஸ்ருதிகா தன்னுடைய இயல்பான குணத்தோடு தான் இருக்கிறார். அதே போல் தான் கரன், சிம் ஆகியோருடன் பழகி வருகிறார்.

ஆனால் ஃப்ரண்ட்ஷிப் என்ற பெயரில் அவருக்கு நடந்த டார்ச்சரை நாம் பார்த்தோம். அதனால்தான் அர்ஜுன் இப்படி ஒரு அட்வைஸை கொடுத்திருக்கிறார்.

மேலும் சுருதிகாவுக்கு வெளியில் அதிக ஆதரவு இருக்கிறது. அதனால் இந்த டைட்டிலை அவர் வெல்ல வேண்டும் என தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி ஆடியன்ஸ் கூட ஆசைப்படுகின்றனர்.

Trending News