புதன்கிழமை, ஜனவரி 8, 2025

உதயநிதி போல் ஆந்திராவின் பெரிய தலைக்கட்டு எடுக்கும் சாட்டை.. கூலா என்ஜாய் பண்ணும் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் மீது பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷங்கர் இயக்கி முடித்திருக்கும் படம் இந்தியன் 3. இந்தியன் 2 ஃபெயிலியரால் இந்த படம் நிலுவையில் இருக்கிறது.

லைகா பணம் போட்ட தயாரிப்பாளர் என்ற முறையில் இந்த படத்தை முடித்து தரும்படி ஷங்கரிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் மேற்கொண்டு ஷங்கர் பெரும் தொகை இருந்தால் தான் படத்தை முடிக்க முடியும் என டகால்டி கொடுத்து வருகிறார். இப்பொழுது செய்வதறியாமல் லைகா தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலை நாடி இருக்கிறது.

ஷங்கரால் இந்தியன் இரண்டாம் பாகம் படம் பெரும் நஷ்டமாகிவிட்டது. ஏற்கனவே முக்கால்வாசி எடுத்த மூன்றாம் பாகத்தை முடித்து தருவதற்கும் பெரும் தொகையைக் கேட்கிறார் என ஷங்கர் மீது ரெட் கார்டு போட சொல்லி வாதம் செய்து வருகிறது லைக்கா நிறுவனம்.

ஷங்கருக்கு ரெட் கார்டு போடவில்லை என்றால் அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தை வெளியிட தடை செய்ய கேஸ் போடுவோம் என்று லைகா தரப்பு எச்சரித்துள்ளது. இதனால் கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் தில்ராஜ், இந்த படத்தை எடுத்தது நான்- உங்கள் பஞ்சாயத்தை உங்களோட பார்த்துக் கொள்ள வேண்டும் என் படத்தில் பிரச்சனை செய்யக்கூடாது என சாட்டையை கையில் எடுத்துள்ளார்.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர் என ஆந்திராவில் பெரிய தலைகட்டாக இருக்கிறார் தில்ராஜ். இப்பொழுது என் படத்தை நீங்கள் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தால். ஆந்திராவில் ஒரு தமிழ் படம் கூட வெளி வராது என சாட்டையை கழற்றி உள்ளார். இப்படி பிரச்சினை போய்க்கொண்டிருக்கும் போது ஷங்கர் எதிலும் தலையிடாமல் கூலாக இருக்கிறார்.

Trending News