புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தீபிகா படுகோனே உடனான முதலிரவு, வெளிப்படையாய் பேசிய ரன்வீர் கபூர்.. அட! இதெல்லாமா சொல்லிட்டு இருப்பீங்க

Ranveer Kapoor: வாய் இருக்குதுன்னு என்னத்தையாச்சும் பேசிகிட்டு இருக்க கூடாதுன்னு வடிவேலு சொல்லுவாரு. அது இப்போ பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருக்கு தான் சரியாக இருக்கிறது.

என்னதான் கேள்வி கேட்பவர்கள் யோசிக்காமல் கேள்வி கேட்டாலும், பதில் சொல்பவர்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும் அல்லவா.

இந்த நிதானம் இல்லாமல் தான் ரன்வீர் சொல்லிய பதில் தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ராம் லீலா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் சமூக ஆதரவை பெற்றவர் ரன்வீர் கபூர்.

வெளிப்படையாய் பேசிய ரன்வீர் கபூர்

இதைத் தாண்டி நமக்கு பரீட்சையமாக தெரிய வேண்டுமென்றால் தீபிகா படுகோனே கணவர் என்று கூட சொல்லலாம்.

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது துவா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் ரன்வீர் கபூர் சமீபத்தில் கரன் ஜோஹரின் பேட்டி ஒன்றில் கலந்து இருக்கிறார். அப்போது பிங்கோ என்ற விளையாட்டு விளையாடப்பட்டிருக்கிறது.

அதில் கரன் ஜோகர் ரன்வீரிடம் திருமணம் ஆன இரவு நீங்கள் ரொம்பவும் சோர்வாக உணர்ந்தீர்களா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரன்வீர் இல்லை அன்று இரவு நான் என் மனைவி தீபிகாவுடன் நெருக்கமாக தான் இருந்தேன்.

மேலும் மனதை உற்சாகமாக என்னிடம் சில பிளே லிஸ்ட்களும் இருந்தது. இதனால் நான் சோர்வாக உணரவில்லை என வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

Trending News