Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுக்கு கல்யாணம் பண்ணி வைத்து மச்சான்கள் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என்று பாண்டியன் நினைத்தார். அதனால் தான் பழனிவேலுக்கு பொண்ணு பார்த்த கையோடு, வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் ஓவர் தெனாவட்டாக இரண்டு மச்சான்களையும் சீண்டினார்.
அதனால் தான் சக்திவேல், பாண்டியனை அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவு பண்ணினார். அந்த வகையில் நிச்சயதார்த்தத்திற்கு குடும்பத்துடன் பாண்டியன் கோவிலுக்கு போய்விட்டு நிச்சயதார்த்தத்தை வேலைகளை தடபுடலாக பார்க்க ஆரம்பித்தார். பழனிவேலுக்கும் பொண்ணு பிடித்துப் போய்விட்டது. தனக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்ற சந்தோஷத்தில் ஆசையுடன் கனவு கண்டு கொண்டிருந்தார்.
ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக சக்திவேல் பொண்ணு பார்த்த வீட்டிற்கு சென்று பழனிவேலுவையும் பாண்டியனையும் பற்றி தவறாக போட்டுக் கொடுத்து விட்டார். அதாவது பழனிவேலுக்கு நிறைய சொத்துக்களும், நாங்களும் சொந்த பந்தங்கள் என்று இருக்கிறோம்.
ஆனால் இந்த பாண்டியன் கடையில் வேலை பார்ப்பதற்கு ஒரு எடுபிடி வேலை பார்ப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்காக பழனிவேலுவை கைவசம் வைத்துக்கொண்டு சம்பளம் இல்லாத வேலைக்காரராக தான் நடத்துகிறார். அப்படிப்பட்ட அவனுக்கா உங்க பொண்ண கொடுக்க போறீங்க என்று தவறாக பேசி பொண்ணு விட்டார்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பொண்ணு வீட்டிலும் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடலாம் என்று முடிவு பண்ணி வீட்டில் அமைதியாக இருந்து கொண்டார்கள். இது எதுவும் தெரியாத பாண்டியன், பொண்ணுவீட்டர்கள் வருவாங்க என்று கோவிலில் மொத்த குடும்பத்தையும் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் பழனிவேலுவின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக கோமதியின் அம்மா மற்றும் அண்ணிகள் இரண்டு பேரும் வந்து விட்டார்கள். அவர்கள் வந்த பிறகும் பொண்ணு குடும்பத்தில் இருந்து யாருமே வர காணும். அவங்க தான் நமக்கு முன்னாடியே வந்து எல்லா ஏற்பாட்டையும் பண்ண வேண்டும் என்று கோமதியின் அம்மா சொல்லியதும் பாண்டியன் பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி பார்க்கிறார்.
ஆனால் பொண்ணு வீட்டில் இருப்பவர்கள் போனை அட்டென்ட் பண்ணாததால் பாண்டியன், செந்தில் மற்றும் சரவணன் பொண்ணு வீட்டுக்கு அனுப்பி பார்த்துட்டு வர சொல்றார். அப்படி பார்த்து பேசிய பொழுது பெண் வீட்டார்கள் சொல்லியது பழனிவேலு உங்க கடையில் எடுபிடி வேலைதான் பார்க்கிறார்.
இப்படிப்பட்ட ஒருத்தருக்கு நாங்கள் எங்க பொண்ணை கொடுக்கவில்லை. அதனால் இந்த கல்யாணமும் நிச்சயதார்த்தமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இந்த விஷயத்தை செந்தில் மற்றும் சரவணன், கோவிலில் காத்துக் கொண்டிருக்கும் அனைவரது முன்னிலையிலும் பாண்டியனிடம் வந்து சொல்கிறார்கள்.
இதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக நிலையில் பழனிவேலுவும் இது எனக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப அதிர்ச்சியாகி சோகமாகிவிட்டார். இவ்ளோ நாள் சிரிப்பும் காமெடியும் ஜாலியாக இருந்த பழனிவேலுவின் சந்தோசத்தை மொத்தமாக சக்திவேல் சூழ்ச்சி செய்து காலி பண்ணி விட்டார்.
சொந்த தம்பிக்கு ஒரு நல்லது கூட பண்ண விடாமல் தடுத்த சதிகாரராக தான் இருக்கிறார். இனிமேல் இந்த விஷயத்தை வைத்து சக்திவேல் மற்றும் முத்துவேல், பாண்டியனை அவமானப்படுத்தி பேசுவார்கள். அத்துடன் பழனிவேலு வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரர் போல் தான் இருக்கிறார் என்று ஊருக்குள் பேச ஆரம்பித்ததும் வேற பொண்ணும் கிடைக்காது என்று பீல் பண்ண ஆரம்பித்து விடுவார்.
அந்த சமயத்தில் பாண்டியனுக்கு வேற வழி இல்லாததால் பழனிவேலுவின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அவருடைய மகள் அரசியை கல்யாணம் பண்ணி வைப்பதற்கு முடிவு எடுத்து விடுவார்.