வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

விஷால் கண் கலங்கியதை பார்த்து பதிலடி கொடுத்த தர்ஷிகா.. பிக் பாஸ் வீட்டுக்குள் போகப் போகும் அடுத்த போட்டியாளர்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் வருகிற ஜனவரி 19ஆம் தேதி முடியப் போகிறது. இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால் வீட்டிற்குள் இருக்கும் எட்டு போட்டியாளர்களையும், வெளியில் இருக்கும் மக்களையும் என்டர்டைன்மென்ட் பண்ணும் விதமாக எலிமினேட் ஆகி போன போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே போயிருக்கிறார்கள்.

அந்த வகையில் இனி நம்ம தான் ஆட்டத்திலேயே இல்லையே சும்மா புகுந்து விளையாடலாம் என்பதற்கு ஏற்ப யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கணும். எப்படி அவர்களை டைவர்ட் பண்ணி வெளியே அனுப்பலாம், யாரை பணப்பெட்டியை எடுக்க வைக்கலாம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு போட்டியாளர்களும் காய் நகர்த்தி வருகிறார்கள்.

அத்துடன் இதுவரை நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு விஷால் இருந்து இருக்கிறார். அந்தவகையில் இவரை இருக்கும் இடத்தில் தட்டி வைக்க வேண்டும் என்பதற்காக உள்ளே நுழைந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விஷால் லவ் கன்டென்ட் கொடுத்ததனால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதற்கு ஏற்ப வச்சு செய்து விட்டார்கள்.

அந்த வகையில் சுனிதா மற்றும் சாட்சினா கேட்ட கேள்வி ஒருத்தர் இல்லன்னா இன்னொருத்தர் என்பதற்கு ஏற்ப முக்கோண காதலை கையில் எடுத்திருக்கிறாய். அந்த வகையில் தற்போது அவர்கள் இரண்டு பேருமே வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆனாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் நீ உன்னுடைய ஆட்டத்தை விளையாடி வருகிறாய் உனக்கு கூச்சமாவே இல்லையா என்று சுனிதா, நச்சென்று நாலு கேள்வி கேட்டு விட்டார்.

அத்துடன் சாட்சனா, நீ ஒரு லவ்வர் பாய் இல்லை. பெண்களை வைத்து விளையாடும் ஒரு பிளேபாய் என்று சொல்லியதால் அந்த வார்த்தை விஷாலை மிகவும் காயப்படுத்தி விட்டது. அதனால் கண்ணீர் விட்டு அழும் படி விஷால் உள்ளே ரொம்பவே கண்கலங்கியபடி ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். இதனைப் பார்த்த தர்ஷிகா, உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் என் பெயரை எடுத்து பேச வேண்டாம் என்பதற்கு ஏற்ப சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரை எடுக்க வேண்டாம். நான் வெளியே வந்ததற்கு வேற யாரும் பொறுப்பில்லை நான்தான் காரணம். மற்றவர்களை குறை சொல்வது நியாயமே இல்லை. அத்துடன் நான் யாருடைய பாசத்திற்கும் அடிமையாகி என்னுடைய ஆட்டத்தை விடவும் இல்லை, நான் இருக்கும் வரை எனக்கு ஏற்ற மாதிரி தான் விளையாடி வந்தேன்.

இனியும் என்னுடைய பெயரை வைத்து மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் விஷாலை ஒவ்வொருவரும் தர்ஷிகாவை வைத்து டார்கெட் பண்ணி பேசுவதை புரிந்து கொண்ட தர்ஷிகா இதை நிறுத்துவதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News