வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வந்த வேலைய மட்டும் பாருங்க.. பிக்பாஸிடம் அர்த்த ராத்திரியில் அர்ச்சனை வாங்கிய Ex போட்டியாளர்கள்

Biggboss 8: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டுவிட்டு சென்ற பழைய எட்டு போட்டியாளர்கள் வந்துள்ளனர். இவர்களை வைத்து தான் இந்த வாரம் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ்.

உள்ளே வந்ததுமே இவர்கள் வெளியில் நடக்கும் அத்தனை கதையையும் புட்டு புட்டு வைத்து விட்டனர். இதையெல்லாம் சைலண்டா பார்த்து வந்த பிக் பாஸ் பிறகு எந்த விஷயத்தையும் ஓப்பன் செய்யக்கூடாது என ரூல்ஸ் போட்டார்.

ஆனாலும் திருந்தாத போட்டியாளர்கள் தங்களுக்குள் பல திட்டங்களை போட்டு வந்தனர். நேற்றைய எபிசோடில் இரவு லைட் ஆப் செய்த பிறகும் இவர்களின் விவாதம் தொடர்ந்தது

அதை அடுத்து பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக உடனே லைட் ஆன் செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்தனர்.

அர்த்த ராத்திரியில் அர்ச்சனை வாங்கிய Ex போட்டியாளர்கள்

தொடர்ந்து பேசிய பிக் பாஸ் நான் உங்களுக்கு போட்ட ரூல்ஸ் என்ன ஆச்சு. விதிமுறைகளையும் மீறி எதற்கு பேசுறீங்க என கடும் கோபத்தோடு பேசினார்.

அதேபோல் தேவையில்லாமல் பேசிய சாச்சனாவையும் கடுமையாக எச்சரித்தார். உடனே அனைவரும் எங்களை மன்னிச்சிருங்க சாமி என இறங்கி வந்து கதற ஆரம்பித்து விட்டனர்.

இப்படியாக அர்த்த ராத்திரியில் அர்ச்சனை கொடுத்து அனைவரையும் மிரட்டி விட்டார் பிக் பாஸ். ஆனாலும் பழைய போட்டிகள் இப்போது முத்துவை கீழிறக்க பிளான் செய்து வருகின்றனர்.

அதற்காக ரயானை அவர்கள் பகடைக்காயாக உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் ஆட்டம் மாறுமா அல்லது பழைய போட்டியாளர்கள் மொக்கை வாங்குவார்களா என பார்ப்போம்.

Trending News