வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீனா கொடுத்த ஐடியாவால் சிக்க போகும் கல்யாணி.. சிட்டி ரோகிணியின் டீலிங்கை கண்டுபிடிக்க போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனாவுக்கு ரோகினி மீது அடுத்து என்ன சந்தேகம் வந்திருக்கிறது என்றால் ரோகிணி எதற்காக சிட்டியிடம் இருந்து பணத்தை வட்டிக்கு வாங்கி செலவழிக்க வேண்டும். அவங்க அப்பா மலேசியாவில் பணக்காரராக இருக்கும்பொழுது ரோகிணிக்கு அப்படி இங்கே என்ன செலவு இருக்கிறது.

அதுவும் மனோஜ்க்கு கூட தெரியாமல் பணம் வாங்கி இருக்கிறார் என்றால் இதற்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய போனில் மட்டும் இருந்த சத்யா வீடியோ எப்படி வெளியே போனது என்று எனக்கு ரொம்ப நாளாகவே சந்தேகமாக இருக்கிறது. இதற்கும் ரோகினிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.

ஆனால் நம்மிடம் எதுவும் ஆதாரம் இல்லாமல் சொன்னால் எடுப்படாது, அதனால் இதற்குப் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை நான் சீக்கிரமாக கண்டுபிடிக்கிறேன் என்று முத்து மீனாவிடம் சொல்லிவிட்டார். அடுத்ததாக முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து நடிகர் வீட்டுக்கு சென்று மனோஜை ஏமாத்திட்டு போன கதிரை பற்றி விசாரிக்கிறார்கள்.

அப்படி விசாரிக்கும் பொழுது கதிருக்கு சொந்த ஊரு ஏற்காடு, மற்றபடி எனக்கு அவரைப் பற்றி தெரியாது தெரிந்தால் சொல்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அந்த சமயத்தில் சிந்தாமணி டெக்ரேசன் ஆர்டருக்காக வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்பொழுது அந்த நடிகர் மண்டபத்திற்குள் இருக்கும் டெக்கரேஷன் எல்லாத்தையும் நீங்க பாத்துக்கோங்க, வெளியிலும் மாப்பிள்ளை மற்றும் மணமகள் காருக்கு டெக்கரேஷன், வீட்டு டெக்கரேஷன் எல்லாத்தையும் மீனா பார்க்கட்டும் என்று ஆர்டரை பிரித்து கொடுத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, முத்து மற்றும் மீனாவை சீண்டும் அளவிற்கு பேசிவிடுகிறார்கள். ஆனால் முத்து நாங்கள் யாருக்கும் போட்டி கிடையாது எங்களுக்கு வந்து ஆஃபரை நாங்கள் பண்ணுகிறோம். உங்களால முடிஞ்சது பார்த்துக்கோங்க என்று சவால் விடும் அளவிற்கு முத்து பதிலடி கொடுத்து விட்டார். பிறகு முத்து மற்றும் மீனா வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை விஜயா ரோகிணி மற்றும் மனோஜ் அனைவரும் இருக்கும்பொழுது கதிரின் சொந்த ஊர் ஏற்காடு என்பதை தெரிந்து விட்டது.

இன்னும் அடுத்தப்படியாக கதிரை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அவனுடைய போட்டோ இருந்தால் போதும் ஈசியாக கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார். அப்பொழுது முத்து, மனோஜை பார்த்து உன்னிடம் ஏதாவது போட்டோ இருக்கிறதா என்று கேட்கிறார். இல்லை என்று மனோஜ் சொல்லிய நிலையில் அனைவரும் என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார்.

அதாவது அந்த கதிருக்கு அட்வான்ஸ் பணத்தை கோவிலில் வைத்து தான் கொடுத்தார்கள். அந்த கோவிலில் சிசிடிவி கேமரா இருக்கிறது அதை பார்த்தால் தெரிந்துவிடும் என்று மீனா சொல்கிறார். உடனே முத்து நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று சொல்லிய நிலையில் மீனா எனக்கு அந்த கோயிலில் நிர்வாகம் பண்ணும் அதிகாரிகளை தெரியும். அதனால் நான் அந்த வீடியோவை கேட்டுட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

உடனே ரோகிணி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியாமல் சிட்டியை வரவழைத்து கதிர் ஏமாற்றிப் போன விஷயத்தையும் 30 லட்சம் ரூபாய் திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவும் கதிரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று சிட்டி இடம் சொல்லுகிறார். மேலும் கதிர் புகைப்படம் வேண்டுமென்றால் கோவிலில் இருக்கும் வீடியோ பார்த்தால் போதும்.

அந்த வீடியோவை நீங்கள் எப்படியாவது போயிட்டு வாங்கிட்டு வந்து விடுங்க. உங்களைத் தவிர அந்த வீடியோ முத்து கையில் கிடைக்கக்கூடாது என்று ரோகிணி முத்துவுக்கு தெரியாமல் சைலண்டாக பிளான் பண்ணுகிறார். அதாவது அந்த பணம் தன் மூலமாக தான் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் முத்து முகத்தில் கரியை பூசி நாம் கெத்து காட்ட முடியும் என்பதற்காக ரோகிணி பிளான் பண்ணுகிறார்.

ஆனால் இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக மீனா நிச்சயம் அந்த கோவிலில் சென்று வீடியோவை பார்த்து சிசிடிவி ஃபுட்டேஜ் வாங்கி விடுவார். அடுத்ததாக மீனா, செருப்பு தைக்கும் தாத்தாவை சந்திக்கும் பொழுது முத்துவின் போனை பார்த்து விடுவார். அப்பொழுது இந்த போன் எப்படி இங்கே கிடைத்தது என்று விசாரிக்கும் பொழுது ஆட்டோல போகும் போது ஒரு பொண்ணு கீழே போட்டு போய்விட்டது. அந்த பொண்ணு திரும்ப வந்தால் கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

உடனே மீனா, முத்துவிடம் இந்த விஷயத்தை சொல்லிய நிலையில் முத்துவுக்கு திரும்பவும் அந்த போன் கையில் கிடைக்கப் போகிறது. அதன் மூலம் முத்து ஃபோனில் இருந்து அந்த வீடியோவை யார் மொபைலுக்கு அனுப்பப்பட்டது என்பதை பார்த்து ரோகிணி தான் இதற்குப் பின்னாடி இருந்து சதி செய்திருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து விடும். அந்த வகையில் இந்த வாரம் ரோகிணி, சிட்டி மற்றும் சத்யா திருடின வீடியோ விஷயத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார்.

Trending News