வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அடித்து பிடித்து ஓடி வந்த ஆர்யா.. விஷாலை சுற்றி வளைத்த நண்பர்கள் கூட்டம்

Vishal: சில தினங்களுக்கு முன்பு மதகஜராஜா ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அப்போது விஷாலை பார்த்த பலரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

வாட்டசாட்டமாக இருந்த மனிதர் என்ன இப்படி ஆயிட்டார் என அவரின் ரசிகர்கள் இப்போது ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் கை நடுக்கத்தோடு பேசியது வைரலாகி வருகிறது.

அவருக்கு அதிகபட்ச காய்ச்சல் அதனால்தான் இவ்வளவு சோர்வாக இருக்கிறார் என அந்த நிகழ்வில் பேசி சமாளித்தார்கள். ஆனால் உண்மையில் விஷாலுக்கு நீண்ட நாளாக உடல் நலப் பிரச்சினை இருக்கிறது.

பாலாவின் அவன் இவன் படத்தில் இவர் மாறுகண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக ரொம்பவும் அவர் கஷ்டப்பட்டார். அப்படி நடித்ததால் அவருக்கு சில நரம்பு பிரச்சனைகளும் ஏற்பட்டது.

விஷாலை சுற்றி வளைத்த நண்பர்கள் கூட்டம்

அதன் விளைவு தான் இப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் மீண்டு வந்து விடுவார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஷாலை இப்படி பார்த்த ஆர்யா ரொம்பவும் பதட்டப்பட்டு இருக்கிறார். இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதன்படி மும்பையில் இருந்த ஆர்யா தற்போது பதட்டத்தோடு சென்னை வந்து விஷாலை பார்த்திருக்கிறார். அதேபோல் மற்ற நண்பர்கள் கூட்டமும் விஷாலை தேடி வந்திருக்கின்றனர்.

ஏனென்றால் சமீப நாட்களாக விஷால் எந்த நண்பர்களையும் சந்திக்கவில்லை. இவர்கள் தேடி வந்தாலும் கூட சார் வீட்டில் இல்லை என்ற பதில் தான் கிடைத்திருக்கிறது.

அந்த அளவுக்கு அவர் தனிமை விரும்பியாக இருந்திருக்கிறார். தற்போது நண்பர்கள் அனைவரும் அவரை வெளியில் அழைத்து வந்து குதூகலப்படுத்தி இருக்கின்றனர்.

உன்னை பழைய மாதிரி மாற்றுவது தான் எங்கள் வேலை நீ சரியாகும் வரை நாங்கள் உன் கூட தான் இருப்போம் எனக்கூறி இருக்கின்றனர்.

அதனால் விரைவில் விஷாலை நாம் பழைய சுறுசுறுப்புடன் காணலாம் என்ற தகவல்கள் வந்திருக்கிறது. தற்போது ரசிகர்களும் அவருக்கான பிரார்த்தனையில் இறங்கி இருக்கின்றனர்.

Trending News