வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தம்பியை தன் பக்கம் இழுக்க முத்துவேல் போட்ட பிளான்.. பாண்டியனுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிந்த பழனிவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு பாண்டியன் முகத்தில் கரியை பூசி விட்டோம் என்ற சந்தோசத்தில் முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆனந்தமாக இருக்கிறார்கள். அதுவும் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அவமானப்பட்டு வரும் பொழுது நாம் அவர்களை கேலி செய்ய வேண்டும் என்பதற்காக வாசலிலே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் வந்ததும் இதுதான் சான்ஸ் என்று என்ன பொண்ணு வீட்டார்கள் உங்க மூஞ்சில கரிய பூசி விட்டார்களா என்று நக்கல் அடித்து கேட்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோமதி நீ எல்லாம் ஒரு அண்ணனா? என்னதான் கோபமாக இருந்தாலும் தம்பி வாழ்க்கையை இப்படி கெடுக்கிறோமே என்று கொஞ்சம் கூட உனக்கு மனசு குத்தவே இல்லையா?

எங்க மீது இருக்கும் கோபத்தில் அவன் வாழ்க்கையை இப்படி கெடுத்து விட்டாயே என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விட்டார். ஆனாலும் சக்திவேல் எதற்கும் அசராத போல் அவங்க செஞ்சது தப்பே இல்லை என்பதற்கு ஏற்ப பாண்டியனிடம் மல்லுக்கட்டுகிறார்கள். பிறகு இவங்க இப்படிதான் என்று வீட்டிற்கு போக நினைத்த பாண்டியன் குடும்பத்தை நிறுத்தி வைத்து முத்துவேல், பழனிவேலுவிடம் டீல் பேசுகிறார்.

அதாவது உன்னுடைய கல்யாணத்தை நிறுத்த வேண்டும், உன்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நீ எங்களுடைய தம்பி நாங்கள் நினைத்தபடி தான் உன்னுடைய கல்யாணம் நடக்க வேண்டும். இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை நீ எங்களுடன் வந்து விட்டால் எங்களுடைய சொத்துகளில் பாதி உனக்கு உண்டு. இந்த ஊரே மூக்கு மேல விரலை வைத்து பார்க்கும் அளவிற்கு உன்னுடைய கல்யாணத்தை நான் பிரம்மாண்டமாக நடத்துகிறேன்.

உனக்கு ஆசைப்பட்ட மாதிரி எல்லா விஷயமும் கிடைக்கும் ராஜா மாதிரி இந்த வீட்டில் இருக்கலாம் என்று பழனிவேலுவை தன் பக்கம் இருப்பதற்காக முத்துவேல் பல ஆபர்களை கொடுத்து டீல் பேசுகிறார். அதற்கு பழனிவேலு நீங்க சொன்னபடி என்னுடைய கல்யாணத்தை பண்ணி வைத்த பிறகு நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு அக்கா வீட்டுக்கு போய் விட்டால் அப்பமும் எங்களை பிரிக்க வேண்டும் என்றுதான் நினைப்பீங்க.

அத்துடன் இன்னும் கோபம் அதிகமாகி விட்டால் எங்களை கொலை கூட செய்ய தயங்க மாட்டேன் என்று பதிலடி கொடுக்கும் அளவிற்கு பழனிவேல் பேசிவிட்டு பாண்டியன் வீட்டிற்குள் போய்விடுகிறார். பிறகு எல்லாரும் மூஞ்சியை தொங்க போட்டு இருக்கும் நிலையில் பழனிவேல் இதைப் பற்றி யோசித்து பிரயோஜனம் இல்லை. இனி யாருமே எனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம் எனக்கு கல்யாணமே வேண்டாம்.

மறுபடி மறுபடியும் என்னால் அவமானப்பட முடியாது என்று சொல்லி கடைக்கு கிளம்பி விடுகிறார். பிறகு பழனிவேலு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வருபவர்களும் நிச்சயதார்த்தம் நின்னுப் போனதை பற்றி பேசி பழனிவேலுவின் மனசை நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பாண்டியன், பழனிவேலுவை வீட்டுக்கு போக சொல்லி நாளைக்கு வர சொல்கிறார்.

அதற்கு பழனிவேல் நாளைக்கு வந்தாலும் பேசுற வாய் பேச தான் செய்யும். அவங்களுக்கு பயந்து போய் வீட்டுக்குள்ளே இருக்க முடியாது என்று சொல்லிய நிலையில் கதிர் வந்து முக்கியமான இடத்திற்கு போக வேண்டும் என்று பழனிவேலுவை கூப்பிடுகிறார். உடனே பாண்டியனும், அவன் கூட கூப்பிட்ட இடத்துக்கு போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பின்பு கதிர் செந்தில் மற்றும் பழனிவேல் அனைவரும் கடையில் இருந்து வெளியே கிளம்பி விடுகிறார்கள்.

கடைசியில் பழனிவேலுக்கு எங்கே தேடியும் பொண்ணு கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் அந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு தான் வழி பண்ணுவாங்கள் என்று பாண்டியன் முடிவு எடுத்து விடுவார். அந்த வகையில் மச்சானின் வாழ்க்கைக்காக அரசியை கட்டி வைக்க போகிறார்.

Trending News