புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

எதிர்நீச்சல் 2வில் சைக்கோ வில்லனாக மாறிய கதிர்.. மல்லுவேட்டி மைனராக மாறப் போகும் குணசேகரனின் வாரிசு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கதிரின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது இதற்கு குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை என்பதற்கு ஏற்ப தான் இருக்கிறது. ஏனென்றால் கதிர் சொத்துக்காக இவ்ளோ நாள் ட்ராமா ஆடி குடும்பத்தை மட்டுமில்லாமல் குணசேகரனையும் நம்ப வைத்திருக்கிறார். கதிரின் நடிப்பை பார்த்து ஏமாந்து போன குணசேகரன் மொத்த சொத்துக்களையும் கதிர் பேருக்கு எழுதி வைத்துவிட்டார்.

நமக்கு தேவையானது கிடைத்து விட்டது இனி நாம் தான் ராஜா என்ற மெதப்பில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் கெத்தாக கதிர் வர ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தன் மீது எந்தவித தப்பும் இல்லை என்பதற்கு ஏற்ப குடும்பத்தில் ஒரு டிராமாவை போட்டுவிட்டு வெளியே லாயருடன் சைக்கோ தனமான பேச்சுகளை பேசி விட்டார். அதாவது குணசேகரனிடம் நீங்கள் வெளியே வந்து விட்டால் உங்களுடைய சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று பத்திரத்தில் கையெழுத்து போட்டார்.

ஆனால் அந்த பத்திரம் இனிமேல் தேவையே இல்லை என்பதற்கு ஏற்ப கதிர் கிழித்து தூர போட்டு விட்டார். அத்துடன் இனி குணசேகரன் வெளியே வரவும் கூடாது உள்ளே தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வப்போது ஒரு டிராமாவை மட்டும் போட்டு செண்டிமெண்டாக பேசி மற்றவர்களை ஏமாற்றி விடுவேன். அது மட்டும் இல்லை இனி என் வீட்டுப் பெண்கள் அனைவரும் அடுப்பங்கரையில் தான் வேலை பார்க்கப் போகிறார்கள்.

அதனால் இப்பொழுது ஆடும் வரை ஆடட்டும் அதன் பிறகு என்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன் என்று சைக்கோ வில்லனாகவே மாறிவிட்டார். அந்த வகையில் இனி இவர்தான் குணசேகரன் என்பதற்கு ஏற்ப கதிரை வில்லனாக கொண்டு வந்து வேல ராமமூர்த்தியை ஓரங்கட்டி விட்டார் . ஆனால் இதில் மிகவும் பாதிப்படைந்து இருப்பது நந்தினி தான். கதிரிடமும் எதுவும் பேச முடியாமல் ரேணுகாவுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இதனை புரிந்து கொள்ள முடியாத ஞானம் நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டார். அங்கு ரேணுகா கண்ணீருடன் புருஷனை நினைத்து பீல் பண்ணுகிறார். அங்கே நந்தினி வந்த நிலையில் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது ரேணுகாவின் அம்மா கதிரை திட்டியது மட்டுமில்லாமல் எல்லாம் தெரிந்தும் நந்தினி வாயை மூடிக்கொண்டு இருப்பது புருஷனுக்கு சப்போர்ட்டாக தானே. அப்படி என்றால் நந்தினிக்கும் சொத்து மீது ஆசை இருக்கிறது என்று ரேணுகாவின் மனசில் விதைக்கிறார்.

இப்படியே போனால் ரேணுகா நந்தினி சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக கதிரின் திட்டத்தின் படி குடும்பத்தில் இருப்பவர்கள் யார் என்ன வேணாலும் நினைக்கட்டும் தன் பக்கம் அம்மா மற்றும் தர்ஷன் இருந்தால் போதும் என்று அவர்களுக்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தப் போகிறார். ஏற்கனவே தர்ஷன் அவருடைய கையில் பணம் இல்லை என்று ரொம்பவே பீல் பண்ணுகிறார். அந்த வகையில் தர்ஷன் கையில் பணத்தை கொடுத்து திசை திருப்பப் போகிறார்.

அதாவது குணசேகரன் இருக்கும் பொழுது கதிரை எப்படி பணம் கொடுத்து கெடுத்தாரோ அதே மாதிரி கதிர், தர்ஷனுக்கு பணத்தை கொடுத்து மல்லுவேட்டி மைனராக மாற்றி அவன் வாழ்க்கையை பாழாக்க போகிறார். குணசேகரன் இடத்திற்கு கதிர் வந்தாச்சு, கதிர் இடத்திற்கு இனி தர்ஷன் தான் என்பதற்கு ஏற்ப அதை சுற்றி கதை வரப்போகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஆரம்பத்திலே பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஜனனி மற்றும் ஈஸ்வரி எடுக்கும் அதிரடி முடிவால் கதை மொத்தமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

அதாவது குணசேகரன் எழுதிக் கொடுத்த சொத்துக்கு வாரிசு என்கிற அடிப்படையில் கேஸ் போட்டால் கதிரின் ஆட்டம் கொஞ்சம் அடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News