வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெண்ணிலா போடும் டிராமா, பரிதாபமாக இருக்கும் காவிரி.. காதலிக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில் மாட்டிய விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஆபீஸில் MD பொறுப்பை ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார். இந்த சர்ப்ரைஸ் காவேரி புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ஏதாவது சொல்லி நக்கல் அடிக்கும் விதமாக பேசிக்கொண்டே காவிரியே ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் காவேரி நம்மளை விஜய் விவாகரத்து பண்ணப் போகிறார்.

அதற்கான ஏற்பாடு தான் பண்ணப் போகிறார் என்று தவறாக புரிந்து கொண்டு டென்ஷன் ஆகி ஆபீஸ்ல இருந்து காரை அவசரமாக எடுத்துக்கொண்டு போனதால் ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு காயமாகிவிட்டது. இதனால் கடுப்பான விஜய், காவிரியை திட்டி விட்டார். அடுத்து வெண்ணிலா கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி கொண்டு வருவதை விஜய் உணர்கிறார்.

வெண்ணிலாவும் அதற்கேற்ற மாதிரி விஜய் கையை விடாமல் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் விஜய் என்ற பெயரை சொல்லி விஜய் கையை பிடித்துக் கொண்டு விடாமல் வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்த சூழ்நிலையை பார்த்த காவிரி மனிதளவில் கஷ்டப்படுகிறார் என்று விஜய் புரிந்து கொண்டார். அதனால் வெண்ணிலாவிடம் நைசாக பேசி காவேரி கூட போகலாம் என்று நினைத்தார்.

இருந்தாலும் வெண்ணிலா விஜய் கையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அந்த வகையில் வெண்ணிலாவுக்கு உண்மையிலே சில ஞாபகங்கள் வந்துவிட்டது. ஆனாலும் விஜய்யை விட்டுக் கொடுக்கும் முடியாமல் டிராமா பண்ணுவது போல் தெரிகிறது. இந்த டிராமாவை புரிந்து கொள்ளாமல் விஜயும், வெண்ணிலா மீது பாவப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு பக்கம் காதலித்த காதலி, இன்னொரு பக்கம் தற்போது மனசுக்குள் குடி புகுந்த மனைவி என்று இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆனால் அந்த வீட்டில் தாத்தா மட்டும் காவிரியின் நிலைமையை சரியாக புரிந்து கொண்டு விஜய் இடம் கரராக பேசுகிறார். அதாவது விஜய், வெண்ணிலவை ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு கூட்டிட்டு போக கிளப்பிவிட்டார்.

அப்படி போகும்பொழுது காவிரி முன்னாடியே தாத்தா சொன்னது என்னவென்றால் வெண்ணிலா சரியாக சீக்கிரம் குணமாக வேண்டும் என்றால் ஆஸ்பத்திரியில் வைத்து கவனித்தால் மட்டும் தான் முடியும். அதனால் செக்கப் முடித்துவிட்டு ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி விடு என்று தாத்தா சொல்கிறார். காவிரி முன்னாடி சரி என்று சொல்லிவிட்டு விஜய் போன நிலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்ன சில காரணங்களால் வெண்ணிலாவே விட முடியாமல் வீட்டிற்கு திரும்ப கூட்டிட்டு வந்து விடுகிறார்.

வெண்ணிலாவை பார்த்த தாத்தா டென்ஷன் ஆகி விஜய்யிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார். விஜய்க்கும் எல்லாமே புரிகிறது ஆனாலும் வெண்ணிலாவை அப்படியே விட மனசு இல்லாமல் தவிக்கிறார். இதையெல்லாம் தாண்டி வெண்ணிலாவை அவசரப்பட்டு வீட்டிற்கு கூட்டிட்டு வந்த காவிரி தற்போது பரிதாப நிலையில் இருக்கிறார். அட்லீஸ்ட் காவிரியை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்றால் விஜய் அவருடைய மனசில் இருக்கும் விஷயத்தை தெள்ளத் தெளிவாக பேசி புரிய வைத்தால் மட்டுமே தான் காவிரிக்கு நிம்மதி கிடைக்கும்.

Trending News