சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வணங்கானை சூர்யா ரிஜெக்ட் செய்த காரணம்.. அதே கதையால் பாலாவை கழட்டிவிட்ட அன்புத் தம்பி

வணங்கான் படம் இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்தது. காலையில் 11 மணிக்கு மேல் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. எப்பொழுதுமே பாலாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

வணங்கான் படம் தொடங்கிய போது சூர்யா தான் கமிட்டாகி நடித்து வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் திடீரென இந்த கதையில் இருந்து சூர்யா பின் வாங்கினார். அதற்கு இந்த படத்தை பார்த்தால் தான் எல்லோருக்கும் விடை கிடைக்கும்.

ஆரம்பத்தில் வணங்கான் படத்தின் கதையை பற்றி தெரியாத சூர்யா அதன் பின் சுதாகரித்துக் கொண்டு இது நமக்கான படம் இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த படம் பி கிரேடு நடிகர்கள் நடிக்க வேண்டிய கதை. அருண் விஜய் இதற்கு பொருத்தமானவர் தான்.

2022ஆம் ஆண்டு ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன் இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை எதிர்த்து போராடக் கூடியவராக நடித்தார். இந்த படம் அவருக்கு சரியாக போகவில்லை.

இப்பொழுது வணங்கான் படத்திலும் அதே போன்ற கதைக்களம் தான். அதுவும் சூர்யா இப்பொழுது ஏ கிரேடு ஹீரோக்கள் வரிசையில் இடம்பெற்று விட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடித்து வரும் அவருக்கு இந்த கதையின் மீது நாட்டமில்லை .

Trending News