Thalapathy Vijay: ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று சொல்வார்கள். இதை இப்போதுதான் நடிகர் விஜய் யோசிக்கிறார் போல.
அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டில் ஏற்கனவே வளர்ந்த கட்சிகளிடம் போட்டி போட வேண்டும்.
ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில்லறை பஞ்சாயத்துக்களை சமாளிப்பதிலேயே விஜய்க்கு அதிருப்தி வந்துவிட்டது போல் தெரிகிறது.
பிள்ளை பெறுவதற்கு முன் பெயர் வைக்காதே என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
என்ன தான் நடக்குது பனையூரில்?
பிரச்சனை ஆரம்பித்திருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில். தூத்துக்குடி மாவட்டத்தில் யாரை பொதுச்செயலாளர் ஆக்குவது என்பதுதான் தற்போது பிரச்சனை.
பாலா மற்றும் அஜித்தா என்ற இரு தரப்பினருக்கிடையே இந்த போட்டி நிலவி வருகிறது.
இதில் பாலாவை மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்பது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முடிவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த சமரச பேச்சு வார்த்தைக்காக அதிருப்தி நிர்வாகிகளை இன்று பனையூருக்கு வரவைத்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்த மீட்டிங்கில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அவர் தளபதி 69 படபிடிப்புக்கு சென்று விட்டார்.
கட்சியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜய் ஷூட்டிங் போயிருப்பது அவருக்கு நிர்வாகிகள் மீது ஏற்பட்ட அதிருப்தியை தான் காட்டுகிறது.
தேர்தல் வருவதற்கு முன்பே உள்ளுக்குள்ளேயே தகராறு செய்து கொண்டிருந்தால் எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்.
இது தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பெரிய அளவில் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தவே அதிக வாய்ப்பு இருக்கிறது.