சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அவ்ளோ தான் சவுண்ட் அக்கா சோலி முடிஞ்சது.. அஜித் ஃபேன்ஸை சீண்டி விட்ட பிக்பாஸ் சௌந்தர்யா

Biggboss 8: இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் சௌந்தர்யா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே வீட்டுக்குள் சும்மா இருந்துகிட்டு பிஆர் வச்சு தப்பிக்கிறாங்க என்ற பேச்சு இருக்கிறது.

அதை வீட்டுக்குள் வந்த பழைய போட்டியாளர்களும் போட்டு உடைத்தனர். இதனால் அழுது டிராமா போட்டு ஓட்டு வேட்டையை தொடங்கிவிட்டார் அம்மணி.

ஆனாலும் இந்த கியூட் ரியாக்ஷன் வச்சு டைட்டிலை அடிக்க முடியாது. முத்துக்குமரனுக்கு தான் எங்கள் சப்போர்ட் என ஆடியன்ஸ் வரிந்து கட்டிக்கொண்டு ஓட்டு வேட்டையில் இறங்கிவிட்டனர்.

அவருக்குத்தான் இப்போது சோஷியல் மீடியாவில் மவுசு அதிகரித்துள்ளது. அதை சௌந்தர்யாவே இன்னும் அதிகப்படுத்தி விட்டார்.

அஜித் ஃபேன்ஸை சீண்டி விட்ட பிக்பாஸ் சௌந்தர்யா

அதாவது வீட்டுக்குள் டான்ஸ் மாரத்தான் போட்டி நடக்கிறது. அதில் சௌந்தர்யா கில்லி திரிஷா வேஷம் போட்டுள்ளார் அதேபோல் சிவகுமார் அஜித் லேஷம் போட்டுள்ளார்.

இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சௌந்தர்யா உங்களுக்கு வயசாயிடுச்சு, பைக் எடுத்துக்கிட்டு ரேஸ் கிளம்பிடுறீங்க என கலாய்க்கும் வகையில் பேசி இருந்தார்.

அந்த வீடியோ வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் இப்போது கொந்தளித்து விட்டனர். இந்த பிக்பாஸ் இல்லனா நீ எல்லாம் யாருன்னு எங்களுக்கு தெரியாது.

அதுலயும் பிஆர் டீம் வச்சு ஓட்டு வாங்குற உனக்கு இதெல்லாம் தேவையா? 30 வருஷமா தன்னோட சொந்த உழைப்பில் முன்னேறி ரசிகர்கள் மனசுல இடம் பிடித்தவர் தான் எங்க கடவுள் அஜித்.

ஆனா நீ 30 வயசுக்கு மேல பிக் பாஸ் மூலம் பேமஸ் ஆகணும்னு நினைக்கிற. நீ எல்லாம் அவர பத்தி பேசலாமா என கண்டபடி ட்வீட் போட்டு வருகின்றனர்.

அது மட்டும் இன்றி முத்துக்குமரனுக்கு ஓட்டு போடுங்க என சில ரசிகர்கள் பிரச்சாரம் செய்யாத குறைதான். இதனால் சௌந்தர்யாவின் இமேஜ் இன்னும் டேமேஜ் ஆகி இருக்கிறது.

Trending News