சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

50 லட்சத்துக்கு வீடா?. விஜய் டிவியின் சீக்ரெட்டை போட்டுடைத்த செந்தில் கணேஷ்-ராஜ லட்சுமி

Vijay TV: விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோகளில் ஒன்று ஏர்டெல் சூப்பர் சிங்கர். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது சர்ச்சையான கருத்து ஒன்று உலா வருகிறது.

அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கும் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் மதிப்பிலான சொந்த வீடு கொடுக்கப்படும்.

இந்த வீட்டை யார் வாங்குகிறார்கள் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

அப்படி இருக்கும்போது ஒன்பதாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றவர்தான் அருணா. இவர் தனக்கு இன்னும் அந்த 50 லட்சம் மதிப்பிலான வீடு கிடைக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.

50 லட்சம் வீட்டிற்கு 15 லட்சம் ரூபாய் வரி கட்டினால் தான் அவருக்கு சொந்தம் ஆகுமாம்.

செந்தில் கணேஷ்-ராஜ லட்சுமி

15 லட்சம் ரூபாயை தன்னால் உடனே ஏற்பாடு பண்ண முடியாததால் இன்னும் புது வீட்டிற்கு போக முடியவில்லை என்று சொல்லி இருந்தார்.

இது குறித்து எட்டாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆன புகழ் பெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதிகளிடம் கேட்கப்பட்டது.

அவர்களும் தங்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான வீடு கொடுக்கவில்லை என்று சொல்லி இருந்தார்கள். அந்த 50 லட்சம் ரூபாய் வீட்டிற்கு 15 லட்சம் வரி கட்ட சொல்லி இருந்தார்களாம்.

ஆனால் அவர்களிடம் 15 லட்சம் இல்லையாம். அவர்களுக்கு இரண்டு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது ஒன்று 15 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும்.

இல்லையென்றால் வரிப்பணமான 15 லட்சத்தை மைனஸ் பண்ணிவிட்டு 35 லட்சம் மதிப்பிலான வீடு கொடுக்கப்படும்.

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதிக்கு சொந்த ஊரில் வீடு இருக்கிறது. மேலும் உரக்கடத்தில் வந்து தங்கும் அளவுக்கு இங்கு சென்னையில் அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் கிடையாது.

இதனால் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டையே பெற்றுக் கொண்டதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

Trending News