சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குணசேகரன் கேரக்டரை தூக்கி சாப்பிட்ட பெண் சிங்கம்.. அண்ணனையே புரட்டி போட்டாச்சு, கதிரை சும்மா விட முடியுமா?

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஆணாதிக்க திமிரில் பிற்போக்குத்தனமாக யோசித்து பெண்களை அடிமைத்தனமாக நடத்தி வந்த குணசேகரனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக ஜனனி வந்த பிறகு மற்ற பெண்களுடன் கூட்டணி வைத்து குணசேகரன் இருக்கும் இடத்தை காணாமல் ஆக்கும் விதமாக ஜெயிலில் கலி திங்க அனுப்பி வைத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு அட்டகாசம் பண்ணிய குணசேகரனுக்கு அப்படி ஒரு நிலைமை என்றால் நேற்று பெய்த மழையில் இன்று முளைச்ச காளான் போல் குணசேகரன் ஆக அவதரித்திற்கும் கதிர், என்னதான் அவருடைய ஆட்டத்தை ஆரம்பித்தாலும் உண்டு இல்லைன்னு ஆக்கும் விதமாக ஜனனி ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிந்து விட்டார்.

பொறுத்தது போதும் இனியும் உன்னை அந்த குணசேகரன் போல் வளர விடமாட்டோம் என்று ஜனனி நேருக்கு நேராக மோத ஆரம்பித்து விட்டார். அதிலும் மொத்த சொத்தையும் ஆட்டைய போட்டு ஞானத்தை நடுத்தெருவில் நிறுத்தும் அளவிற்கு கதிர் சூழ்ச்சி செய்து வந்ததால் ஜனனி உஷாராகி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேச ஆரம்பித்து விட்டார்.

இனி தான் எதிர்நீச்சல் 2 சீரியலின் கதை சூடு பிடிக்க போகிறது என்பதற்கு ஏற்ப கதிர் மற்றும் ஜனனி நேருக்கு நேர் மோதிக் கொள்ளப் போகிறார்கள். கதிரும் சும்மா இல்ல அந்த குணசேகரன் கேரக்டரையே மறக்கடிக்கும் விதமாக எதார்த்தமான வில்லத்தனத்தை காட்டி வருகிறார். ஆனாலும் பெண் சிங்கத்திடம் மோத முடியாது என்பதற்கேற்ப ஜனனி ஆவேசமாக கொந்தளித்து விட்டார்.

இந்த பிரச்சனையில் ரேணுகா மற்றும் நந்தினி இருவருக்கும் இடையே விரிசல் வந்துவிடுமோ என்ற நிலைமையில் நேற்று அவர்களுடைய சென்டிமென்ட் ஆன காட்சிகள் பாசப் போராட்டங்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அந்த வகையில் இவர்களுடைய ஒற்றுமையில் யார் நுழைந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப உறுதியாகி விட்டார்கள்.

ஆனால் இந்த ஆதிரை கேரக்டர் தான் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதற்கு ஏற்ப நல்லவளா கெட்டவளா என்று கேட்கும் அளவிற்கு புரியாத புதிராக நடந்து கொள்கிறார். மேலும் எதிர்நீச்சல் முதல் எபிசோடில் குணசேகரன் ஜெயிலுக்கு போகும்போது சொன்னது இந்த ஒரு குணசேகரனை நீங்கள் ஜெயிலுக்கு அனுப்பினாலும், அடுத்தடுத்து பார்க்கும் இடங்களில் எல்லாம் ஒவ்வொரு குணசேகரனாக உங்களை ஆட்டிப் படைக்கப் போகிறார் என்று சொல்லியிருந்தார்.

அதன்படி இந்த நான்கு பெண்களுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக கதிர் அவருடைய ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார். இனி இவரின் கொட்டத்தை அடக்கும் விதமாக கதைகள் நகர போகிறது.

Trending News