சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இப்பல்லாம் ஒரு குடுகுடுப்பைக்காரன் கூட வர்றதில்லையே ஏன்டா.. இனி எவனுக்கும் நல்ல காலம் பொறக்காதுன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்ணே, வைரல் மீம்ஸ்

Memes: அப்புறம் என்ன பொங்கல் வந்துவிட்டது லீவும் எக்கச்சக்கமாக இருக்கிறது. இனி ஒரே கொண்டாட்டம்தான். இப்படித்தான் பள்ளி மாணவர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.

திங்கட்கிழமை ஒருநாள் லீவு போனா போயிட்டு போகுது போடுவோம் நம்மளை யாரு கேட்க போறா. அதையும் சேர்த்தா 9 நாள் லீவு வருது கலக்கிட வேண்டியது தான் என்பது அவர்களின் பிளான்.

ஆனா ரெண்டு நாள் லீவு விட்டாலே வீட்ட ரெண்டு பண்ணிடுவாங்க. இதுல ஒரு வாரம் லீவுனா என்ன பண்றது என்பது பெற்றோர்களின் மைண்ட் வாய்ஸ்.

ஆனாலும் இப்போது பொங்கலை கொண்டாட எல்லோரும் தயாராகி விட்டனர். ஊருக்கு போகிறவர்கள் எல்லாம் பெட்டியையும் கட்டத் தொடங்கி விட்டனர்.

அதிலும் சென்னையில் பொங்கல் விடுமுறை அன்று ஒரே அமைதியாக இருக்கும். ஊரில் இருக்கும் அத்தனை பேரும் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.

இதுதான் இப்போது வைரல் மீம்சாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் மார்கழி தை மாசத்தில் குடுகுடுப்பைக்காரர் கிராமப்புற ஊர்களில் நல்ல வாக்கு சொல்வார்.

இப்போதெல்லாம் அவரைப் பார்க்க முடிவதில்லை ஏன், நமக்கு இனிமே நல்ல காலமே கிடையாதுன்னு அவருக்கே தெரிஞ்சிருக்கு என நகைச்சுவை மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.

Trending News