ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தலைவனாக தளபதி களம் இறங்கும் முதல் போராட்டம்.. காவல் ஆணையருக்கு பறந்த கடிதம்!

Vijay: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் அடுத்தடுத்து தன்னுடைய அரசியல் நகர்வுகளை சரியாக எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்.

நேற்று நீட் தேர்வு குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் போட்ட பதிவு தமிழ்நாட்டில் பெரிய அளவு கவனம் இருப்பது.

ஆளும் கட்சியை எதிர்த்து தைரியமாக கேள்வி கேட்பதன் மூலம் தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அத்தனை கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வருகிறது.

தளபதி களம் இறங்கும் முதல் போராட்டம்

நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு கோடி மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கடைக்குட்டி ஆக போட்டியிடப் போவது தமிழக வெற்றி கழகம் தான்.

மக்களின் ஆதரவை தன் பக்கம் திருப்ப விஜய் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக பரந்தூர் செல்ல இருக்கிறார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதை மத்திய மற்றும் மாநில அரசு பெரிதாக கண்டு கொள்வதாக இல்லை. தற்போது அந்தப் போராட்ட களத்திற்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார் விஜய்.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையருக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

திடீரென ஒரு இடத்திற்கு சென்று கூட்டம் கூடி தேவையில்லாத சிரமங்கள் ஏற்பட விஜய் விரும்பவில்லை. இதனால் தான் சட்டரீதியாக காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

Trending News