Memes: நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ரேஸ் மீது அஜித்துக்கு எவ்வளவு வெறி என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி கடந்த சில மாதங்களாகவே அவர் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
விடாமுயற்சி படம் தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஒரு பக்கம் சோகத்தில் மிதந்து வருகின்றனர். ஆனால் அவர்களை குஷிபடுத்தும் விதமாக ரேஸ் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளிவந்தது.
அதில் நேற்று துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் டீம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதை தமிழகமே கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அஜித்தின் ரசிகர்களும் இதை பொங்கல் ட்ரீட்டாக கொண்டாடி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நெட்டிசன்கள் இதை மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். முதல் இரண்டு இடம் பிடித்தவர்கள் பற்றிய பேச்சே இல்லை.
சோசியல் மீடியா முழுவதும் அஜித்தின் வெற்றிதான் பரவி வருகிறது. இதை முதல் இரண்டு இடம் பிடித்தவர்கள் நாங்க இந்த போட்டிக்கு வந்ததே தப்பு என்று சொல்வது போல் மீம்ஸ் வைரலாகி வருகிறது.
அதேபோல் ஊரே அஜித்தின் வெற்றியை கொண்டாடிவிட்டு இருக்கு நீ ஏம்பா அமைதியா இருக்க. நாங்க விடாமுயற்சி டீம் சார் என மற்றொரு மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
ஏனென்றால் விடாமல் முயற்சி படம் மட்டும் வந்திருந்தால் இந்நேரம் அதுதான் திருவிழாவாக இருந்திருக்கும். அது நடக்காமல் போனதால் லைக்கா ஒரு பக்கம் சோகத்தில் இருக்கிறது. இப்படி இணையத்தை கலக்கும் மீம்ஸ் தொகுப்பு இதோ.