தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஒரு சகாப்தம். அவர் இல்லாமல் தமிழ் திரை உலகே இல்லை என்று கூறலாம். அப்பேர்ப்பட்ட ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கருடன் இனி படம் பண்ண மாட்டேன் என அவர் முகத்துக்கு எதிரே போய் சொல்லுமாறு ஒருவரை தூது விட்டிருக்கிறார்.
6 மணிக்கு சூட்டிங் என்றால் ஐந்து மணிக்கெல்லாம் ஸ்பாட்டிற்கு வந்து முதல் ஆளாக இருப்பவர் ரஜினிகாந்த். அப்படி இருந்தும் எந்திரன் 2.0 படப்பிடிப்பில் அவர் சந்தித்த கஷ்டங்கள் அவரை இனி மேல் இந்த இயக்குனர் வேண்டாம் என்ற முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது.
துரதிஷ்டமாக ஒரு நாள் அரை மணி நேரம் எந்திரன் படபிடிப்பிற்கு தாமதமாக வந்துள்ளார் ரஜினிகாந்த். அன்றுதான் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் மிகவும் கடினமான ஒரு வார்த்தையை கேட்க நேரிட்டது. இயக்குனர் ஷங்கருடைய அக்கா மகன் பப்பு தான் அந்த படத்தின் ப்ரொடக்சன் மேனேஜர்.
அவர்தான் ரஜினியை பார்த்து என்ன சார் டெய்லி லேட்டா வர்றீங்க இது சரி இல்லை என கடுஞ்சொற்களை கூறியுள்ளார், பதறிப்போன ரஜினி அவசர அவசரமாக ஓடி கீழேயும் விழுந்துள்ளார். அடிபட்டு ரத்தம் வந்த நிலையிலும் ஷூட்டிங்கிற்கு போய் நின்றுள்ளார். எல்லாத்தையும் பார்த்து ஷங்கர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
அந்த படபிடிப்பில் கிட்டத்தட்ட ரஜினிக்கு பதினைந்து கிலோ இடையூள்ள ஆடையை கொடுத்து பாடாய் படுத்தியுள்ளனர். கேமராமேன் மற்றும் மேக்கப் மேன் இருவரும் ரஜினி படும் கஷ்டத்தை பார்த்து கண்ணீர் வடித்துள்ளனர்.
அந்த படத்தில் பாலிவுட்டில் இருந்து நடிக்க வந்த அக்ஷய் குமாருக்கு ரஜினியை காட்டிலும் உயர்ந்த கவனிப்பு இருந்துள்ளது. இப்படி அந்த படத்தில் நடிக்கும் போது ரஜினி முழுவதுமாக துன்புறுத்தப்பட்டுள்ளார். ஒரு டைரக்டருக்கு தெரியாமல் சூட்டிங் ஸ்பாட்டில் அனு கூட அசையாதாம், ஆனால் எல்லாத்தையும் கண்டு கொண்டு ஷங்கர் எதையும் காணாதது போல் இருந்துள்ளார்.