திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Ex போட்டியாளர்களை ஜோக்கராக்கிய பிக்பாஸ்.. இது என்ன போங்காட்டமால்ல இருக்கு

Bigggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கிறோம். கடந்த வார நாமினேஷன் முடிவுகளின் படி அருண் தீபக் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

நிச்சயம் இது நியாயம் இல்லாதது தான். ஆனாலும் விஜய் டிவியின் பிளான் படி தானே அனைத்தும் நடக்கும்.

மக்களின் வாக்குகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருந்தது கிடையாது. அதை இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க வீட்டுக்குள் வந்த பழைய போட்டியாளர்களை வைத்து இறுதிவரை வந்தவர்களுக்கு ஆட்டம் காண்பித்து வந்தார் பிக் பாஸ். இவர்களை வைத்து எக்ஸ்சேஞ்ச் செய்யப் போகிறோம் என மிரட்டி விட்டார்.

Ex போட்டியாளர்களை ஜோக்கராக்கிய பிக்பாஸ்

இதனால் ஒரு பயம் டாப் போட்டியாளர்களுக்கு இருந்தது. அதற்கு ஏற்றவாறு வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களும் வெளியில் நடந்த நிகழ்வுகளை சொல்லி பீதியை கிளப்பினார்கள்.

சிலர் உள்ளே இருப்பவர்களை மனரீதியாக குழப்பும் வேலையையும் பார்த்தார்கள். ஆனாலும் முத்து சௌந்தர்யா ஜாக்லின் பவித்ரா ரயான் விஷால் ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பழைய போட்டியாளர்களின் முயற்சி எடுபடவில்லை. அதனால் எவிட் ஆகாமல் இருக்கும் ஆறு பேரும் இறுதி வாரத்திற்குள் செல்கிறார்கள் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பழைய போட்டியாளர்களுக்கு பிம்பிலிக்கா பிளாப்பி என பல்பு கொடுத்துவிட்டார். இது எதிர்பார்த்ததுதான்.

அதன்படி தற்போது ஓட்டு வேட்டை தீவிரமாகி இருக்கிறது. சோசியல் மீடியாவில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போடும் படி பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

இதில் பிக் பாஸ் டீம் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனாலும் தற்போது மக்களின் ஆதரவு முத்துக்கு தான் இருக்கிறது.

Trending News