Memes: நேற்று தை முதல் நாளை முன்னிட்டு பொங்கல் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து இந்த நாளை சிறப்பித்தனர்.
அதை அடுத்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து சேனல்களிலும் இது நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. இது தமிழர்களின் வீரத்திற்கான அடையாளமாகும்.
அதை முன்னிட்டு பெண்கள் வீட்டு வாசலில் கலர் கலராக கோலம் போட்டு தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். பொதுவாக கிராமப்புறங்களில் மார்கழி மாதம் வந்தாலே தெருக்கள் கலைக்கட்டி விடும்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பெண்கள் கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள். இளைஞர்கள் கூட்டம் இதை காண்பதற்காகவே தெருவில் சைக்கிளில் சுற்றி செல்லும் சுவாரஸ்யமும் உண்டு.
ஆனால் அதெல்லாம் காலப்போக்கில் குறைந்து விட்டது. ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் பொங்கல் அன்று பொங்கல் பானை வரைந்து பாரம்பரியம் இன்னும் மறையவில்லை என்பதை காட்டி விடுவார்கள் பெண்கள்.
அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் மாட்டுப் பொங்கல் அன்று அவர்கள் வரையும் மாடுகளை பார்க்கும் போது தான் கதி கலங்கும்.
சில கோலங்களை பார்க்கும் போது அது மாடு தானா அல்லது வேறு ஏதாவது பிராணியா என்று தோன்றும். சிலர் கோலத்தை போட்டு பக்கத்துல அது மாடுன்னு எழுதி வையுங்க. அப்பதான் எங்களுக்கு தெரியும் என கலாய்த்து விடுவார்கள்.
இப்படியாக மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.