புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சீமான் சார் நீங்க எங்க இங்க.. LIK டீம் வெளியிட்ட பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர்

Seeman-LIK: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்களின் ஸ்பெஷல் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. நேற்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 அறிவிப்பு டீசர் வெளியானது.

seeman-lik
seeman-lik

அதேபோல் சூர்யாவின் வாடிவாசல் தொடங்கும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துவிட்டார். இப்படி ரசிகர்கள் எதிர்பார்த்த படங்களின் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி பல மாதங்களாக உருவாகி வருகிறது.

LIK டீம் வெளியிட்ட பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நயன்தாரா இணைந்து தயாரிக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ஆனாலும் பொங்கலுக்கு ஒரு போஸ்டரை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் என்ன சர்ப்ரைஸ் என்றால் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அதில் இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் உடன் அவர் இருக்கும் போஸ்டரை தான் பட குழு வெளியிட்டுள்ளது.

அதில் சீமான் தாடியுடன் கண்ணாடி போட்டு சிரித்தபடி இருக்கிறார். அரசியலில் தீவிரமாக இருக்கும் இவர் சமீப காலமாக பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.

அதேபோல் விஜய்யின் அரசியலையும் எதிர்த்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவர் சினிமா பக்கம் தலைக்காட்டி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இருப்பினும் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தான் அவர் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

Trending News