புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டுக்கு பறக்கும் லோகி.. அட! இது அவருடைய கனவு படம் ஆச்சே!

Lokesh Kanagaraj: முன்னாடி எல்லாம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு ஹீரோயின்கள் தான் பறந்து போவார்கள். ஆனால் இப்போது ட்ரெண்ட் மொத்தமாக மாறிவிட்டது.

இயக்குனர்கள் தான் இங்கிருந்து அந்தப் பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நடிகர் விஜயின் ஆசை தம்பி அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தி திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். அட்லீயை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

அதுவும் பாலிவுட்டின் டாப் ஹீரோ அமீர் கான் உடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார்.

அதைவிட பெரிய சர்ப்ரைஸ் ஆன விஷயம் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் அறிமுகத்திற்காக தேர்ந்தெடுத்து இருக்கும் கதை தான்.

லோகேஷ் மற்றும் சூர்யா இணையவிருந்த இரும்பு கை மாயாவி படத்தை தான் பாலிவுட்டில் இயக்க இருக்கிறார்.

Trending News