வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னப்பா நெல்சன் சார் அத்தனையும் டூப்பாமே!. ஜெயிலர் 2-வால் மொத்தமா வெளுத்த சாயம்

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. என்ன இன்னும் பஞ்சாயத்து ஏதும் ஆரம்பிக்கலையே என்று நினைத்துக் கொண்டிருந்தோம். வலை வீசி தேடி கண்டுபிடித்து தற்போது டீசர் வீடியோவிலேயே பிரச்சனையை கண்டுபிடித்து இருக்கிறா

ர்கள். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ரெக்கார்டு பிரேக்கிங் அடித்த படம் ஜெயிலர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் சிறிய அளவில் வெளியாக ஆரம்பித்தன.

நெல்சன் சார் அத்தனையும் டூப்பாமே

அது எப்படி இதுக்குள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பாங்க, எல்லாம் கட்டுக்கதை பா என்றும் சொல்லப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் மொத்த பதிலாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக இரண்டாம் பாகத்தைப் பற்றி அறிவித்துவிட்டது.

அனிருத் மற்றும் நெல்சன் இன்ட்ரோ கொடுக்க இந்த வீடியோ ஆரம்பித்தது. இந்த வீடியோவின் இறுதியில் ரஜினிகாந்த் காக்கி சட்டையுடன் நடந்து செல்வது போல் காட்டப்பட்டு இருக்கும்.

இதில் தான் பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ரஜினி நடந்து செல்வது போல் காட்டப்பட்ட வீடியோவில் நடித்தது ரஜினி கிடையாது.

நெல்சன் டூப் போட்டு எடுத்திருக்கிறார். டீசர் வீடியோவுக்கு டூப் என்றால் படத்தை எப்படி எடுப்பார் என கலாய்த்து வருகிறார்கள்.

இது குறித்து வலைப்பேச்சு சேனலும் அந்த காட்சி டூப் போட்டு எடுக்கப்பட்டது என நேற்று சொல்லி இருக்கிறது

Trending News